மேலை கங்கர்கள் - Western Gangas

மேலை கங்கர்கள் கோலார், தலைக்காடு போன்ற பகுதிகளை ஆட்சி செய்த மன்னர்கள். இவர்களை பற்றிய ஒரு சிறு ஆராய்ச்சி கட்டுரையே இது. மேலை கங்கர்களின் ஒரு கிளையினர் தமிழகத்தில் சிற்றரசர்களாக ஆட்சி செய்துள்ளனர் என்பது ஒரு கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது. Epigraphia Indica Vol - 7, page 192,193 இந்த கல்வெட்டு பல்லவ மன்னன் விஜயகம்பணனின் காலத்து கல்வெட்டாகும். இதில் பிருத்துவி கங்கர் ஒருவரை பற்றி குறிப்பிடுகிறது. அவரை ''காங்கேய வம்சம்'' என்றும் "அவரின் முன்னோர் என்று மாதவா அவர்களையும் அரிவர்மன்(corrupt form) என்பவரையும் குறிப்பிடுகிறது" மாதவா என்பவரின் மெய்க்கீர்த்தியாக ''he who renowned as the splitter of even a stone pillar'' என்பதை குறிப்பிடுகிறது, இந்த மெய்க்கீர்த்தியானது மேலை கங்க மன்னர்களின் முன்னோடியான கொங்கேணி வர்மன் அவர்களின் மெய்க்கீர்த்தி ஆகும். கொங்கேணி வர்மனின் வழியினன் மாதவா என்கிற மன்னன் ஆகும், எனவே தன் முன்னோடியான கொங்கேணி வர்மனின் மெய்க்கீர்த்தியை மாதவா பயன்படுத்தி இருக்கிறார். அரிவர்மன் என்கிற மேலை கங்க மன்னர் மாதவா அவர்களின் வழியினர் ஆகும்....