சிலையெழுபது கம்பர் இயற்றியதா?

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய சிலையெழுபது நூலை சிலர் கம்பர் அவர்கள் எழுதவே இல்லை என்று கூறுவதுண்டு, அது உண்மையா என்றால் கம்பர் சிலையெழுபதை எழுதியதற்கு சில சான்றுகள் உண்டு அறந்தாங்கி தொண்டைமான்களின் முன்னோர் ஒருவர் மீது கம்பர் இலக்கியம் இயற்றியுள்ளார் என்ற வாக்கியம் பல செப்பேடுகளில் வருகிறது - "கம்பன் ஒட்டைகூத்தனுரைதமிழ் புனைந்தோன்" என்று ஏம்பல்வயல் செப்பெடில் வருகிறது - "கம்பன் தமிழுக்குச் செம்பொன் னளித்தோன்" என்று பண்ணைவயல் செப்பெட்டில் வருகிறது இந்த வாக்கியம் சிலையெழுபது நூலை குறிப்பதே ஆகும், கம்பர் இயற்றிய நூல்களில் சிலையெழுபது மட்டுமே தொண்டைமான்களோடு தொடர்புடையது. அது கருணாகர தொண்டைமான் மீது இயற்றப்பட்டது, கருணாகர தொண்டைமானன முன்னோர் என்று அறந்தாங்கி தொண்டைமான்கள் பல இடங்களில் முதன்மையாக பதிவு செய்துள்ளனர் - "கலிங்கன் திறைகொண்ட கருணாகரன்" அநேகமாக கருணாகர தொண்டைமானின் நேரடி வழியினராக அறந்தாங்கி தொண்டைமான்கள் இருக்கலாம். "கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தான்" என்று வரும் இந்த வரி மிக தெளிவாக சிலையெழுபது நூலையே குறிப்பிடுகிறது, சிலையெழு...