சிலையெழுபது கம்பர் இயற்றியதா?

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய சிலையெழுபது நூலை சிலர் கம்பர் அவர்கள் எழுதவே இல்லை என்று கூறுவதுண்டு, அது உண்மையா என்றால் கம்பர் சிலையெழுபதை எழுதியதற்கு சில சான்றுகள் உண்டு

அறந்தாங்கி தொண்டைமான்களின் முன்னோர் ஒருவர் மீது கம்பர் இலக்கியம் இயற்றியுள்ளார் என்ற வாக்கியம் பல செப்பேடுகளில் வருகிறது -

"கம்பன் ஒட்டைகூத்தனுரைதமிழ் புனைந்தோன்" என்று ஏம்பல்வயல் செப்பெடில் வருகிறது -

"கம்பன் தமிழுக்குச் செம்பொன் னளித்தோன்" என்று பண்ணைவயல் செப்பெட்டில் வருகிறது

இந்த வாக்கியம் சிலையெழுபது நூலை குறிப்பதே ஆகும், கம்பர் இயற்றிய நூல்களில் சிலையெழுபது மட்டுமே தொண்டைமான்களோடு தொடர்புடையது. அது கருணாகர தொண்டைமான் மீது இயற்றப்பட்டது, கருணாகர தொண்டைமானன முன்னோர் என்று அறந்தாங்கி தொண்டைமான்கள் பல இடங்களில் முதன்மையாக பதிவு செய்துள்ளனர் -

"கலிங்கன் திறைகொண்ட கருணாகரன்"

அநேகமாக கருணாகர தொண்டைமானின் நேரடி வழியினராக அறந்தாங்கி தொண்டைமான்கள் இருக்கலாம். 

"கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தான்" என்று வரும் இந்த வரி மிக தெளிவாக சிலையெழுபது நூலையே குறிப்பிடுகிறது, 

சிலையெழுபது நூலில் ஒரு பாடலில் கம்பர் தான் தான் இந்த நூலை இயற்றினேன் என்றும் இந்த நூலின் பெயர் செம்பொன் சிலையெழுபது என்றும் பதிவு செய்துள்ளார் -

"செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவா மிந்நூல்"

மேலும் கருணாகரன் ஆயிரம் பொன் அளித்ததை பற்றி சிலையெழுபது நூலிலே ஒரு இடத்தில் வருகிறது -

 "கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்

கருணாகரத்தொண்டை வன்னியனே"

எனவே கம்பர் தொண்டைமான் வம்சத்தின் மீது இயற்றிய ஒரே நூல் சிலையெழுபது என்பதனாலும், அதற்கு செம்பொன் சிலையெழுபது என்று பெயர் இருப்பதினாலும், அந்த நூல் இயற்றியதால் ஆயிரம் பொன் பெற்றேன் என்று அவர் கூறுவதனாலும் அறந்தாங்கி தொண்டைமான் செப்பெடில் வரும் வரியான "கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்" என்பது சிலையெழுபது நூலையே குறிப்பிடுகிறது என்பது தெளிவு

அறந்தாங்கி தொண்டைமான்களின் அரச சான்றே இதை கூறுவதால் இதை மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???