நரலோகவீர காலிங்கராயர்
பெரும்பான்மையானோர் மூவேந்தர் மற்றும் பல்லவர் வெற்றி வரலாற்றை தெரிந்துகொள்ள காட்டும் ஆர்வத்தை அந்த வேந்தர்களின் வெற்றிக்கு பாலமாக இருந்த படை தலைவர்கள், குறு நில வேந்தர்கள், வீரர்கள் ஆகியோரின் வரலாற்றை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது இல்லை
அரும்பக்கிழான் - நரலோகவீரன் - அருளாகரன் - காலிங்கராயன் - மணவிற் கூத்தன் - தொண்டையர்க்கோன் என பல்வேறு பெயர்களை கொண்டவர் "நரலோகவீர பேரரையர்"
இந்த நரலோகவீரன் பற்றி நாம் முதன் முதலில் அறிவது குலோத்துங்க சோழர் காலத்தில் தான். கலிங்க போரின் பின்பே இவரின் பேராற்றல் எத்தகையது என்று தெரிய உதவுகிறது
"வேங்கையினும் கூடார் விழிஞத்தும், கொல்லத்தும் கொங்கத்தும் ஒடா இரட்டத்தும், நாடாதடியெடுத்த வெவ்வே றரசிரிய வீரக்கொடியெடுத்த காலிங்கர் கோனும்"
வேங்கி என்கிற கீழை சாளுக்கியர் தலைநகரையும், ஒட்டம் என்கிற ஒரிசாவையும், இராஷ்ட்ரகூடரின் அரியாசனமான மராட்டியத்தையும் என வடுகர்களின் தீய கனவாய் தோன்றி அவர்கள் அனைவரையும் அழித்து சோழ வேந்தனுக்கு கீழ் பணிய செய்த மாவீரர் என்கிறது விக்ரமசோழனுலா
இத்தகைய வீரத்தாலும் தலைமை பண்பாலும் சோழ ராஜ்யத்தின் மிக முக்கிய அமைச்சராகவும் உயர்வு பெற்றார் நரலோகவீரன்
தன் வாழ்க்கையின் முதல் பாதியை சோழ பதாகை தாங்கி பல வடுகர்களை நசுக்கிய இவர் அடுத்த பாதியில் புலி படையுடன் தென்னாடு புகுந்தார், பாண்டியநாட்டை வென்று மீண்டும் பாண்டிய நாட்டில் வேங்கை கொடியை பறக்க செய்தார்
விழிஞசம், கோட்டாறு, காந்தளூர்சாலை முதலிய மேலை கடற்கரை நகரங்களில் நிகழ்ந்த போர் அனைத்திலும் வில்லவனை(சேரன்) வெற்றி கொண்டார். காந்தளூர்சாலையில் நிறுத்தபட்டிருந்த சேரனின் கடற்படை சுக்குநூறு ஆக்கப்பட்டது, கோட்டாறு தீக்கரையாக்கப்பட்டது. சேர மன்னனும், பாண்டிய மன்னனும் சோழனின் கீழ் கப்பங்கட்டி ஆட்சி செய்ய தலைப்பட்டனர்
வருங்காலங்களில் மீனவனும், வில்லவனும் மீண்டும் தலையெடுக்க கூடாது என்பதற்காக நிலைப்படை ஒன்றையும் தென்னாட்டில் நிறுவினார்
இவர் முதுமை காலத்தில் கோயில்களுக்கும், சமுதாயத்திற்கும் பல திருப்பணிகளை செய்தார். தேவாரங்களை செப்பேட்டில் அடித்து தில்லைக்கு கொடுத்தார், தில்லை நூறுகால் மண்டபம் எழுப்பியது இவரே
இத்தகைய மாவீரர் பள்ளி குலத்தவர் என்பதை விக்ரம சோழரின் கல்வெட்டு குறிப்பிடுகிறது -
"முன்னூற்று குடிப்பள்ளி செங்கெணி அம்மையப்பன் பாண்டியான நரலோக வீரப்பேரரையனேன்"
இவரின் வமசத்தவர்கள் "காலிங்கராயர்" என்றும் "தொண்டைமான்" என்றும் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தனர், அவர்களில் முக்கியமான ஒருவரை பற்றி பிறகு பார்போம்.
Comments
Post a Comment