இராமநாதபுரம் சேதுபதிகள் வேளாளர்களா?
இராமநாதபுரம் சேதுபதிகள் வேட்டுவ மறவர் குலத்தில் தோன்றியவர் என்றே நினைத்திருந்தேன்
"Studies in Indian Epigraphy" எனும் நூலை சில காலம் முன் படிக்க நேர்ந்தது, அதில் மறவர் சேதுபதியை சூத்திரர் என்றும் வேளாளர் என்றும் குறிப்பிட்டு இருந்தனர், அதற்கு reference ஆக பணவிடு தூது எனும் நூலை குறிப்பிட்டு இருந்தனர்
இதை எதோ footnote என்று அப்போது கடந்து சென்று விட்டேன், ஏன் என்றால் மறவர் எப்படி வேளாளர் ஆக முடியும் என்ற அசட்டு ஆய்வு
ஆனால் இன்று எதேச்சையாக ஒரு நூல் கண்களில் பட்டது, அதனை ஆய்வு செய்யும் போது ஒரு மாபெரும் அதிர்ச்சி!!!
முத்து விஜய ரகுநாத சேதுபதி மீது சொக்கநாத கவியாயர் அவர்களால் 1700களின் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட பணவிடு தூது எனும் இலக்கிய நூல் தான் இந்த அதிர்ச்சியை எனக்கு தந்தது
இந்த நூலில் பாட்டுடைய தலைவனான முத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்களை மெழியான் என்கிறார் புலவர் -
"விண்ணுக்கு ளோங்கு நெடு மெழியான்"(274)
நீதி தவறாமல் செங்கோல் செலுத்திய சேதுபதியை மிக தெளிவாக "வேளாளர்" என்று குறிப்பிடுகிறார் -
"பொய்யைத் துரத்திப் புவியில்செங் கோல்செலுத்த மெய்யைத் தலைநிறுத்தும் வேளாளன்"(237)
மேலும் முத்து ரகுநாத மன்னர் அவர்களை கங்கை குலம் என்றும் புலவர் குறிப்பிடுகிறார் -
"கங்கைகுலத் தோன்றிவுங் கர்த்தவிசு வாசமுமாந் தங்கள் குலவித்தை தனைவளர்த்தோன் - திங்கள் உறுந்தா ரகைபோ லொழியார் முத்தார நறுந்தாரன் முத்துரகு நாதன்"
இந்த பாடல்களை கண்ட பின் எனக்கு மிக தெளிவாக தோன்றியது என்னவென்றால், ஆரம்ப காலங்களில் வேளாளர்களின் அரசாக இருந்த இந்த "ராம்நாடு சேதுபதி அரசு", பிற்காலங்களில் யாதொரு காரணத்தினாலோ மறவர் அரசாக மாறி போய் உள்ளது, அல்லது மாற்றப்பட்டுள்ளது
மறவர் என்பது பொது பெயர் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment