திருமங்கை ஆழ்வார் கள்ளர் சாதி அல்ல

பெருமாளுக்கு தொண்டு புரிந்த ஆழ்வார்கள் 12 பேர், இவர்களில் ஒருவர் தான் திருமங்கை ஆழ்வார்

மிகவும் புகழ்பெற்ற நம் திருமங்கை ஆழ்வார் அவர்கள் பல்லவர் மீதெல்லாம் பாடல் பாடியுள்ளார் என்பது வரலாறு, அத்தகைய திருமங்கை ஆழ்வாரின் சாதி என்ன என்பதை அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்

அதிலும் பெரும்பாலான அறிஞர்கள் திருமங்கை ஆழ்வார் அவர்களை கள்ளர் குடியை சேர்ந்தவர் என்கிறார்கள்

இது மிகவும் பொருத்தமற்றது, அபத்தமானது என்பது நமக்கு சான்றுகளின் வாயிலாக தெரியவருகிறது

1728ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை கள்ளர் குல தொண்டைமான் கல்வெட்டு அவர் தன்னை திருமங்கை ஆழ்வாரின் வழி வந்தவர் என்று குறித்து கொள்கிறார், இது "பிற்கால புகழுரை" என்று புலவர் ராசு கருதுகிறார், இவரின் இந்த கருத்து மிகவும் சரியானதாகும்

பிற்காலத்தில் உயர்வு நீட்சிக்காக புதுக்கோட்டை தொண்டைமான்கள் அவ்வாறு புனைந்து கொண்டனர் என்பதே சரியாகும்

இந்த கல்வெட்டை வைத்து தான் பல அறிஞர்கள் திருமங்கை ஆழ்வார் அவர்களை கள்ளர் குலத்தவர் என்று எண்ணி கொண்டு கருத்தை தெரிவித்துள்ளனர் போல

கள்ள குல தொண்டைமான் மட்டுமின்றி, மறவர் குல ஊத்துமலை ஜமீன்தார் அவர்களும் கள்ள திருமங்கை ஆழ்வார் என்று பாளையபட்டு வம்சாவழியில் குறித்துள்ளார்

மேலும் முத்தரையர் குல மக்களும் இதே போல் பிற்கால கல்வெட்டு ஒன்று திருமங்கை ஆழ்வார் அவர்களை முத்தரையர் குலம் என்று கல்வெட்டு வெட்டியுள்ளனர்

"ஶ்ரீ திருமங்கை மன்னன வதரித்த முத்துராஜ குலம்"

எனவே பிற்கால சான்றுகளை பெரிதும் பொருட்படுத்தாமல், வேந்தர் கால சான்றுக்கு முதன்மை அங்கீகாரம் அளிக்க வேண்டும்

சோழ சக்கரவர்த்திகள் மூன்றாம் இராஜராஜ சோழ தேவரின் கல்வெட்டு ஒன்று மிக மிக மிக தெளிவாக திருமங்கை ஆழ்வார் அவர்களை "காராளர் கற்பகமான திருமங்கையாழ்வார்" என்று குறிப்பிட்டு விடுகிறது, காராளர் என்பது இன்றைய வேளாண் பெருங்குடி மக்களான வேளாளர்களை குறிப்பதாகும், காராளர் என்பது வேளாளரே என்பதை நிகண்டுகள் மெய்பிக்கின்றன

பிற்கால வம்சாவழி பாளையபட்டுகள், பிற்கால 18ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளை காட்டிலும்

சோழர் கல்வெட்டுகள் அதிக நம்பகத்தன்மை கொண்டதாகும், அதுவும் அரசர் பெயரோடு இது எழுதபட்டமையால் இதன் நம்பகத்தன்மை அதிகம், எனவே காராளர் குல கற்பகமான திருமங்கை ஆழ்வார் அவர்களை வேளாளர் குலத்தவர் என்ற உண்மையை ஏற்போம்.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???