வன்னியர்களான இருக்குவேளிர்கள்

சங்க இலக்கியமான புறநானூறு 201, மிக தெளிவாகவே வேளிர் யார் என்பதை குறிப்பிட்டு விடுகிறது, அதாவது "வடபால் தவமுனி" என்று "திருமூலர் திருமந்திரத்தில்" அறியப்பட்ட அகத்தியரின் யாகத்தில் உதித்த வம்சத்தை சேர்ந்தவர்கள் என்று வேளிர்களின் பிறப்பை பற்றி நன்கறிந்திருந்த புலவர் பெருமான் கபிலர் குறிப்படுகிறார் "நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, உவரா ஈகை, துவரை ஆண்டு, நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே!" இத்தகைய அகத்தியரின் யாகத்தில் பிறந்தவர்கள் வன்னியர்கள் என்பதை 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த மேலை சாளுக்கியரின் சமஸ்கிருத கல்வெட்டு குறிப்பிடுகிறது, பன்னாட்டார்கள்(பள்ளி நாட்டார்) சம்பு முனி மஹா வேள்வியில் தோன்றியவர் என்று மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு குறிப்பிடுகிறது எனவே பள்ளி நாட்டார் என்பதும் வன்னியர் என்பதும் ஒன்றே என்பதும் சம்பு முனிவர் என்பவரும் அகத்திய முனிவர் என்பவரும் ஒரே நபர் என்பதும் விளங்கும், மேலும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் வாதாபி வென்ற பல்லவர் செப்பேடு மிக தெளிவாக "வாதாபி என்ற அரக்கனை அழித...