வன்னியர்களான இருக்குவேளிர்கள்




சங்க இலக்கியமான புறநானூறு 201, மிக தெளிவாகவே வேளிர் யார் என்பதை குறிப்பிட்டு விடுகிறது, அதாவது "வடபால் தவமுனி" என்று "திருமூலர் திருமந்திரத்தில்" அறியப்பட்ட அகத்தியரின் யாகத்தில் உதித்த வம்சத்தை சேர்ந்தவர்கள் என்று வேளிர்களின் பிறப்பை பற்றி நன்கறிந்திருந்த புலவர் பெருமான் கபிலர் குறிப்படுகிறார் 

"நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, உவரா ஈகை, துவரை ஆண்டு,
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே!"

இத்தகைய அகத்தியரின் யாகத்தில் பிறந்தவர்கள் வன்னியர்கள் என்பதை 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த மேலை சாளுக்கியரின் சமஸ்கிருத கல்வெட்டு குறிப்பிடுகிறது, பன்னாட்டார்கள்(பள்ளி நாட்டார்) சம்பு முனி மஹா வேள்வியில் தோன்றியவர் என்று மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு குறிப்பிடுகிறது 

எனவே பள்ளி நாட்டார் என்பதும் வன்னியர் என்பதும் ஒன்றே என்பதும் சம்பு முனிவர் என்பவரும் அகத்திய முனிவர் என்பவரும் ஒரே நபர் என்பதும் விளங்கும், மேலும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் வாதாபி வென்ற பல்லவர் செப்பேடு மிக தெளிவாக "வாதாபி என்ற அரக்கனை அழித்த அகத்தியர் போல, வாதாபி நகரை பல்லவ மல்லன் அழித்தான்" என்று வருகிறது. வன்னிய புராணத்தின் படி வாதாவி அரக்கனை அழிக்க ருத்திர வன்னியர் சம்பு முனிவரின் யாகத்தில் தோன்றினார் என்பது ஐதீகம் 

புறநானூறு 201யில் இருக்குவேளிர் அவர்களை தான் புலவர் கபிலர் யாகத்தில் தோன்றிய வம்சம் என்கிறார், இதற்கு வலு சேர்க்கும் வகையில் கி.பி 1130ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று மிக தெளிவாக "பள்ளி கூத்தன் மதுராந்தகனான இருங்கோள ராமன்"¹ என்று குறிப்பிடுகிறது

"இருங்கோளர்" என்போர் இருக்குவேளிர் வம்சத்தினை சேர்ந்தவர் ஆவார், எனவே வேளிர்கள் யார் என்பது தெளிவாக விளங்கும்

References -

1. A.R.E No. 259 of 1928, 

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???