மறமாணிக்கம் என்றால் மறவர் சாதியா?

மறவர்கள் வரலாற்றில் மண்ணள்ளி போடுகிறேன் என்று நினைக்க வேண்டாம் வரலாற்றை நுண்ணி ஆராய்வது நம் அனைவரின் கடமையாகும் மறவர் சமூகத்தினர் மறமாணிக்கம் என்பது தங்கள் சாதியை குறிப்பது என குறிப்பிட்டு பல blogகளை உருவாக்கியுள்ளனர், மறமாணிக்கம் என்று இணையத்தில் தட்டினாலே பலவற்றை பார்க்கலாம் உண்மையில் மறவர் என்பது வீரரை குறிக்கும் பொது சொல்லே என்று நாம் பல முறை இதற்கு முன்பே பதிவு செய்துள்ளோம், இதற்கு மறமாணிக்கம் என்பதும் விதி விலக்கல்ல புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் - IPS 455ஆவது கல்வெட்டு "எங்களூர் இடைக்குடி மக்களில் கேரளன் சொறனுக்கு எங்கள் ஊர் பேர் மறமாணிக்ககொனேன்று பேர் குடுத்து" என்ற வாக்கியம் வருகிறது அதாவது ஊர் மக்கள் சேர்ந்து இடையர் இனத்தை சேர்ந்த கேரளன் சோரன் என்பவருக்கு மறமாணிக்கம் என்ற பெயரினை வழங்கியுள்ளனர் மேலும் சுந்தர பாண்டியரின் திருமயம் கல்வெட்டு ஒன்று IPS 490யில் உள்ளது அது மறமாணிக்கபட்டன் என்று ஒருவரை குறிக்கிறது "பட்டர்" என்றால் பிராமணரை குறிப்பதாகும் இதனால் ஒரு விஷயம் தெளிவாக விளங்கும், மறமாணிக்கம் என்ற பெயரானது வீரத்தை குறித்த காரண பெயரே அன்றி சாதியை குறிப...