Posts

Showing posts from 2023

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

Image
வன்னிய புராணம் அறிந்த யக்ஞ நாராயண தீக்ஷிதர் குமாரன் ராஜநாராயண ஐயர் அவர்கள் கம்பள மன்னன் அவையில் எங்களின் வன்னிய புராணத்தை கி.பி. 1633 இல் கூறினார். இது பற்றி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட நெய்வேலி செப்பேடு கூறுகிறது. வன்னிய புராணத்தின் சாராம்சம் என்னவென்றால், சம்புமாமுனிவர் சிவபெருமானிடம் பெற்ற செங்கேணி மலர் ஆகுதியை வைத்து, திருபாற்கடலில் பள்ளி கொள்ளும் ஸ்ரீமன் நாராயணமூர்த்தியே வன்னிய குமாரனாய் அவதரிக்கவேண்டும் என்று தியானம் செய்து அதை ஓமகுண்டத்தில் போட கரிய நிறத்துடன் வன்னிய குமாரன் தோன்றினான் என்பதாகும். நெடுமுடியண்ணல் (என்கிற) ஸ்ரீமன் நாராயணமூர்த்தியே வேந்தர் வேளிர்களின் தொடக்கம் என்று தெரியவருகிறது. தரணி வராகன் என்று வேளிர் அரசர் குறிப்பிடப்பட்டனர். அதாவது, உலகத்தை அரசாட்சி செய்யும் பன்றி வடிவான அரசன் என்று குறிப்பிடப்பட்டனர்.

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???

Image
  யது குல சத்ரியரான கிருஷ்ணர் உண்மையில் மேய்ப்பர் ஜாதியான கொல்லா ஜாதியை சேர்ந்தவரா என்பதை சான்றோடு பார்ப்போம் சீவகசிந்தாமணி 482ஆம் பாடல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது - "குலநினைய னம்பி கொழுங்கயற்கண் வள்ளி நலநுகர்ந்தா னன்றே நறுந்தார் முருக னிலமகட்குக் கேள்வனு நீணிரைநப் பின்னை யிலவலர்வா யின்னமிர்த மெய்தினா னன்றே" இதன் சுருக்கமான விளக்கம் சீவகனிடம் தன் மகளை மணந்துகொள்ளுமாறு நந்தக்கோன் கேட்டுள்ளார், குலத்தை பார்க்காதே முருகன் குறவர் குல பெண் வள்ளியை மணந்தார், ஸ்ரீகிருஷ்ணர் அரசர் குலத்தவர் ஆனால் மேய்ப்பர் குல பெண் நப்பின்னை கலப்பு மணம் செய்தார் என்பதாகும் (சீவகன் அரசகுலத்தவன் ஆனால் வணிக குலத்தினரால் வளர்க்கப்பெற்றவன்) எனவே கிருஷ்ணர் நப்பின்னை என்னும் ஆயர் குல பெண்ணை மனந்ததை கலப்பு மணமாக நந்தக்கோன் குறிப்பிடுவதை சீவகசிந்தாமணி குறிப்பிடுகிறது. எனவே கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவர் இல்லை என்பது மிக தெளிவாக விளங்குகிறது.

விளந்தை வாண்டையார்

Image
  கி.பி 1791ஆம் கல்வெட்டு ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது - "வன்னியர் சிங்ககொடி தலைவரான முத்துவிசையரெங்கப்ப காலாக்க தொழர் னாளில் பந்து செனமான விளந்தை காத்த பெருமா வாண்டாயர் குமாரன் பெரியசாமி வாண்டயன் ராமசாமி வாண்டாயன்" அதாவது உடையார் பாளையம் வன்னிய அரசர் "முத்து விசைய ரெங்கப்ப காலாட்கள் தோழ உடையார்" சிங்க கொடி கொண்டிருந்ததையும் அவர்களின் உறவினரான விளந்தை பாளையக்காரர் "காத்த பெருமாள் வாண்டையார்" அவரின் மகன்கள் "பெரியசாமி வாண்டையார், ராமசாமி வாண்டையார்" ஆகியோர் விளந்தை சிவன் கோயில் கட்டியதை குறிப்பிடுகிறது இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 1700களிலே வன்னியர் என்றே உடையார் பாளையம் அரசரும், விளந்தை பாளையக்காரர் வாண்டையாரும் குறிக்க பெறுகின்றனர், வன்னியர்னா 1900ல வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் என்று உருட்டுறவன் உங்களுக்கு யாராவது தெரிந்தால் அவனுக்கு பதிவை share செய்து கேள்வி கேளுங்க.  முதல் படம் - உடையார் பாளையம் பாளையக்காரர் இரண்டாவது படம் - விளந்தை வாண்டையார் சிற்பம்.

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

Image
  சுந்தர பாண்டியன் அவையில் வீர பிள்ளை அவர்களால் பாண்டியன் அவையில் இயற்றப்பட்ட வன்னியர் புராணத்தில் கம்பர் எழுதிய "சிலை எழுபது" பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளது "சம்புவின்மகத்துதித்த தாட்டிகவன்னியரன்று அம்புவிதனினிறைந்தே யரசுசெய்வலிமைகண்டே #கம்பனுஞ்சுருக்கமாகக் கவியுரைத்தன்னிற்காதை யின்பமாய்நவின்ற கீர்த்தியாவரேயுணரகிற்பார்" அதாவது முன்பு கம்பன் வன்னியர் புராணத்தை சுருக்கமாக கூறினாராம், இது சிலை எழுபதையே குறிப்பிடுவதாகும் கம்பர் காலம் 12நூற்றாண்டின் முற்பகுதி, சுந்தர பாண்டியன் 13ஆம் நூற்றாண்டாக இருக்க வேண்டும்.

நரலோகவீர காலிங்கராயர்

Image
பெரும்பான்மையானோர் மூவேந்தர் மற்றும் பல்லவர் வெற்றி வரலாற்றை தெரிந்துகொள்ள காட்டும் ஆர்வத்தை அந்த வேந்தர்களின் வெற்றிக்கு பாலமாக இருந்த படை தலைவர்கள், குறு நில வேந்தர்கள், வீரர்கள் ஆகியோரின் வரலாற்றை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது இல்லை அரும்பக்கிழான் - நரலோகவீரன் - அருளாகரன் - காலிங்கராயன் - மணவிற் கூத்தன் - தொண்டையர்க்கோன் என பல்வேறு பெயர்களை கொண்டவர் "நரலோகவீர பேரரையர்" இந்த நரலோகவீரன் பற்றி நாம் முதன் முதலில் அறிவது குலோத்துங்க சோழர் காலத்தில் தான். கலிங்க போரின் பின்பே இவரின் பேராற்றல் எத்தகையது என்று தெரிய உதவுகிறது "வேங்கையினும் கூடார் விழிஞத்தும், கொல்லத்தும் கொங்கத்தும் ஒடா இரட்டத்தும், நாடாதடியெடுத்த வெவ்வே றரசிரிய வீரக்கொடியெடுத்த காலிங்கர் கோனும்" வேங்கி என்கிற கீழை சாளுக்கியர் தலைநகரையும், ஒட்டம் என்கிற ஒரிசாவையும், இராஷ்ட்ரகூடரின் அரியாசனமான மராட்டியத்தையும் என வடுகர்களின் தீய கனவாய் தோன்றி அவர்கள் அனைவரையும் அழித்து சோழ வேந்தனுக்கு கீழ் பணிய செய்த மாவீரர் என்கிறது விக்ரமசோழனுலா இத்தகைய வீரத்தாலும் தலைமை பண்பாலும் சோழ ராஜ்யத்தின் மிக முக்கிய அமைச்சராகவ...

வன்னியர்களான இருக்குவேளிர்கள்

Image
சங்க இலக்கியமான புறநானூறு 201, மிக தெளிவாகவே வேளிர் யார் என்பதை குறிப்பிட்டு விடுகிறது, அதாவது "வடபால் தவமுனி" என்று "திருமூலர் திருமந்திரத்தில்" அறியப்பட்ட அகத்தியரின் யாகத்தில் உதித்த வம்சத்தை சேர்ந்தவர்கள் என்று வேளிர்களின் பிறப்பை பற்றி நன்கறிந்திருந்த புலவர் பெருமான் கபிலர் குறிப்படுகிறார்  "நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, உவரா ஈகை, துவரை ஆண்டு, நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே!" இத்தகைய அகத்தியரின் யாகத்தில் பிறந்தவர்கள் வன்னியர்கள் என்பதை 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த மேலை சாளுக்கியரின் சமஸ்கிருத கல்வெட்டு குறிப்பிடுகிறது, பன்னாட்டார்கள்(பள்ளி நாட்டார்) சம்பு முனி மஹா வேள்வியில் தோன்றியவர் என்று மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு குறிப்பிடுகிறது  எனவே பள்ளி நாட்டார் என்பதும் வன்னியர் என்பதும் ஒன்றே என்பதும் சம்பு முனிவர் என்பவரும் அகத்திய முனிவர் என்பவரும் ஒரே நபர் என்பதும் விளங்கும், மேலும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் வாதாபி வென்ற பல்லவர் செப்பேடு மிக தெளிவாக "வாதாபி என்ற அரக்கனை அழித...

பிச்சாவரம் சோழகோன், சோழ வம்சமா?

Image
பிச்சாவரம் சோழர்களுக்கு "சோழகோன்" என்று ஆவணங்களில் வருவதால் அதை பிடித்து கொண்டு, தொங்கி கொண்டு அவர்கள் சோழர் இல்லை என்பவர்களுக்கு இந்த இலக்கிய பாடல் ஒரு பதில் "விட்டலராயச் சோழன் மீதுரைத்த அரியசந்த மாலைக்குப் பச்சைமணிக் கங்கணம் பாலித்திடும் கை" பிச்சாவரம் சோழ அரசர் விட்டலராய சோழனை மிக தெளிவாக சோழன் என்றே இலக்கியத்தில் குறிப்பிட்டு உள்ளனர் விட்டலராய சோழன் தான் பிச்சாவரம் குட்டியாண்டவர் கோயிலை கட்டியவர், இவரை பற்றி வன்னிய அரசர்/பாளையக்காரர் பற்றி குறிப்பிடும் "திருக்கைவளம்" நூலில் குறிப்பிட்டுள்ளது  எனவே இந்த "சோழகோன்" சோழர் இல்லை என்ற கதையெல்லாம் வேண்டாம்.

வன்னியர் குறித்து இராஜாஜி & கல்கி

Image
SSR அவர்களின் உழைப்பாளர் கட்சி பற்றி கல்கி அவர்கள் சொல்லும் போது "வன்னியர்கள் பழமையான பல்லவர் குலத்தில் வந்தவர்கள் என்கிறார்" மேலும் கல்கி அவர்களின் 1952 கால இதழில் வன்னியர் யார் தலைப்பில், ராஜாஜி கடலூர் வந்த போது வன்னியர் காங்கிரஸ் விட்டு விலகுவதை எண்ணி வருந்தி பேசியதை பதிவு செய்துள்ளதோடு வன்னியர் குலத்தவர் பல்லவர் மற்றும் சோழ சாம்ராஜ்யத்தின் படைவீரர்களாக, தளபதிகளாக, சிற்றரசர்களாக இருந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

மறமாணிக்கம் என்றால் மறவர் சாதியா?

Image
மறவர்கள் வரலாற்றில் மண்ணள்ளி போடுகிறேன் என்று நினைக்க வேண்டாம் வரலாற்றை நுண்ணி ஆராய்வது நம் அனைவரின் கடமையாகும் மறவர் சமூகத்தினர் மறமாணிக்கம் என்பது தங்கள் சாதியை குறிப்பது என குறிப்பிட்டு பல blogகளை உருவாக்கியுள்ளனர், மறமாணிக்கம் என்று இணையத்தில் தட்டினாலே பலவற்றை பார்க்கலாம் உண்மையில் மறவர் என்பது வீரரை குறிக்கும் பொது சொல்லே என்று நாம் பல முறை இதற்கு முன்பே பதிவு செய்துள்ளோம், இதற்கு மறமாணிக்கம் என்பதும் விதி விலக்கல்ல  புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் - IPS 455ஆவது கல்வெட்டு "எங்களூர் இடைக்குடி மக்களில் கேரளன் சொறனுக்கு எங்கள் ஊர் பேர் மறமாணிக்ககொனேன்று பேர் குடுத்து" என்ற வாக்கியம் வருகிறது அதாவது ஊர் மக்கள் சேர்ந்து இடையர் இனத்தை சேர்ந்த கேரளன் சோரன் என்பவருக்கு மறமாணிக்கம் என்ற பெயரினை வழங்கியுள்ளனர் மேலும் சுந்தர பாண்டியரின் திருமயம் கல்வெட்டு ஒன்று IPS 490யில் உள்ளது அது மறமாணிக்கபட்டன் என்று ஒருவரை குறிக்கிறது "பட்டர்" என்றால் பிராமணரை குறிப்பதாகும் இதனால் ஒரு விஷயம் தெளிவாக விளங்கும், மறமாணிக்கம் என்ற பெயரானது வீரத்தை குறித்த காரண பெயரே அன்றி சாதியை குறிப...

இராமநாதபுரம் சேதுபதிகள் வேளாளர்களா?

Image
இராமநாதபுரம் சேதுபதிகள் வேட்டுவ மறவர் குலத்தில் தோன்றியவர் என்றே நினைத்திருந்தேன் "Studies in Indian Epigraphy" எனும் நூலை சில காலம் முன் படிக்க நேர்ந்தது, அதில் மறவர் சேதுபதியை சூத்திரர் என்றும் வேளாளர் என்றும் குறிப்பிட்டு இருந்தனர், அதற்கு reference ஆக பணவிடு தூது எனும் நூலை குறிப்பிட்டு இருந்தனர் இதை எதோ footnote என்று அப்போது கடந்து சென்று விட்டேன், ஏன் என்றால் மறவர் எப்படி வேளாளர் ஆக முடியும் என்ற அசட்டு ஆய்வு ஆனால் இன்று எதேச்சையாக ஒரு நூல் கண்களில் பட்டது, அதனை ஆய்வு செய்யும் போது ஒரு மாபெரும் அதிர்ச்சி!!! முத்து விஜய ரகுநாத சேதுபதி மீது சொக்கநாத கவியாயர் அவர்களால் 1700களின் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட பணவிடு தூது எனும் இலக்கிய நூல் தான் இந்த அதிர்ச்சியை எனக்கு தந்தது இந்த நூலில் பாட்டுடைய தலைவனான முத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்களை மெழியான் என்கிறார் புலவர் - "விண்ணுக்கு ளோங்கு நெடு மெழியான்"(274) நீதி தவறாமல் செங்கோல் செலுத்திய சேதுபதியை மிக தெளிவாக "வேளாளர்" என்று குறிப்பிடுகிறார் - "பொய்யைத் துரத்திப் புவியில்செங் கோல்செலுத்த மெய்யைத் தலைநிறுத்...

திருமங்கை ஆழ்வார் கள்ளர் சாதி அல்ல

Image
பெருமாளுக்கு தொண்டு புரிந்த ஆழ்வார்கள் 12 பேர், இவர்களில் ஒருவர் தான் திருமங்கை ஆழ்வார் மிகவும் புகழ்பெற்ற நம் திருமங்கை ஆழ்வார் அவர்கள் பல்லவர் மீதெல்லாம் பாடல் பாடியுள்ளார் என்பது வரலாறு, அத்தகைய திருமங்கை ஆழ்வாரின் சாதி என்ன என்பதை அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர் அதிலும் பெரும்பாலான அறிஞர்கள் திருமங்கை ஆழ்வார் அவர்களை கள்ளர் குடியை சேர்ந்தவர் என்கிறார்கள் இது மிகவும் பொருத்தமற்றது, அபத்தமானது என்பது நமக்கு சான்றுகளின் வாயிலாக தெரியவருகிறது 1728ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை கள்ளர் குல தொண்டைமான் கல்வெட்டு அவர் தன்னை திருமங்கை ஆழ்வாரின் வழி வந்தவர் என்று குறித்து கொள்கிறார், இது "பிற்கால புகழுரை" என்று புலவர் ராசு கருதுகிறார், இவரின் இந்த கருத்து மிகவும் சரியானதாகும் பிற்காலத்தில் உயர்வு நீட்சிக்காக புதுக்கோட்டை தொண்டைமான்கள் அவ்வாறு புனைந்து கொண்டனர் என்பதே சரியாகும் இந்த கல்வெட்டை வைத்து தான் பல அறிஞர்கள் திருமங்கை ஆழ்வார் அவர்களை கள்ளர் குலத்தவர் என்று எண்ணி கொண்டு கருத்தை தெரிவித்துள்ளனர் போல கள்ள குல தொண்டைமான் மட்டுமின்றி, மறவர் குல ஊத்துமலை ஜமீன்தார் அவர்...

சூரிய குலத்து வேந்தர்

Image
தமிழ்நாடு அரசு சுவடி நூலகத்தில் (ஆர் எண் - 8926) இருந்த "வன்னியர் சிலை எழுபது" என்ற ஓலைச்சுவடியை முனைவர் திரு. சிவராமலிங்கம் சார் அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டில் புத்தகமாக பதிப்பித்தார்கள். இந்த "வன்னியர் சிலை எழுபது" என்ற ஓலைச்சுவடி நூல், திருவெழுந்தூர் செந்தமிழ்க் கம்பன் அவர்கள் இயற்றிய "சிலை எழுபது" நூலின் வழி நூல் என்று கூறுகிறது :- "திருவெழுந்தூர் செந்தமிழ்க் கம்பன் சொன்ன சிலையெழுபது விருத்தந் தானே" இந்த "வன்னியர் சிலை எழுபது" ஓலைச்சுவடி நூலில் இடம்பெறும் பாடல் - 59 வன்னியர்களை "சூரிய குலத்து வேந்தர்" என்று கூறுகிறது :- "காரிய மாக வென்று கனலினி லுதித்த பேர்கள் ஆரிய மைரர் தேவன் அருள்முனி குலீசன் மாயோன் வாருதி யிலங்கை மூதூர் மன்னனை யழிக்க மிக்க சூரிய குலத்து வேந்தர் தோன்றுகைச் சிலைய தன்றோ"

திண்புயச் சத்திரியோர்கள்

Image
தமிழ்நாடு அரசு சுவடி நூலகத்தில் (ஆர் எண் - 8926) இருக்கும் "வன்னியர் சிலை எழுபது" என்ற ஓலைச்சுவடி நூலானது, சோழர் கால பெரும் புலவரான திருவெழுந்தூர் செந்தமிழ்க் கம்பன் அவர்கள் இயற்றிய "சிலை எழுபது" என்ற நூலின் வழி நூலகும் இந்த "வன்னியர் சிலை எழுபது" என்ற ஓலைச்சுவடி நூலின் காலம் கி.பி. 16 - 17 ஆம் நூற்றாண்டு என்று கருதமுடிகிறது. இந்த நூலில் இடம்பெறும் பாடல் - 14 வன்னியர்களை "தோள் வலிமையுடைய சத்திரியர்கள்" என்று கூறுகிறது :- "குலங்களில் மிகுத்த வேந்தர் கோமள முகத்தி னோர்கள் சினங்களில் மிகுத்து வாழும் திண்புயச் சத்திரியோர்கள்" படைப்பு கடவுளான பிரம்மாவின் தோள்பட்டையில் இருந்து க்ஷத்திரியர்கள் தோன்றினர் என்பதால் "தோள் வலிமையுடைய க்ஷத்திரியர்கள்" (திண்புயச் சத்திரியோர்கள்) என்று இந்த வன்னியர் சிலை எழுபது பாடல் கூறுகிறது என்பதாகும்.