Posts

Showing posts from November, 2022

மலையமான்களான மும்மலராயர்கள்

Image
 மலையமான் வம்சத்தை சேர்ந்த ஒருவரை பள்ளி குலத்தவர் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது "குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனான பள்ளிக்கட்டு மும்மலராயன்" (A.R.E No.81 of 1900) மலையன்/மலையமான்/மலையகுலராயன் என்பதெல்லாம் மலையமான் அரச குலத்தை குறிக்கும் சொற்கள் அப்படி இருக்கும் போது இந்த "மும்மலராயன்/மும்மலையன்" என்பது எதனை குறிக்கும் என்று பல நாள் சந்தேகத்தை நண்பர் ஒருவர் தீர்த்து வைத்தார் சங்க கால மலையமான் காசுகள் பலவற்றில் முன்புறம் மலையமான்களின் இலச்சினையான குதிரையும், பின்புறம் மூன்று மலைகளும் அதற்கு கீழ் பெண்ணை ஆறு ஓடுவது போன்றும் வடிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மலை என்பது இதை தான் குறிக்கும் போல என்பதை அறிந்து கொண்டேன், இந்த மும்மலராயர்கள் என்போர் சங்க கால மலையமான் வம்சத்தை சேர்ந்தவர்கள் என்பது விளங்கியது.

நரலோகவீரன் காலிங்கராயர் மற்றும் அவன் சந்ததியினர்

Image
 தமிழகத்தில் 12-13ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தலைசிறந்த படைதலைவர்களின் மூவர் பற்றிய தொகுப்பே இது!!! இம்மூவரும் ஒரே வம்சத்தவர்கள், வரலாற்று பக்கங்களில் பெரிதும் பேசப்படாத மாவீரர்கள் மற்றும் குருசில்கள் முதலாவதாக மணவிற்கூத்தன் மானாவதாரன் அரும்பக்கிழான் சபாநர்த்தகா நரலோகவீரன் காலிங்கராயன் என்பவன் ஆவான்  இவன் முதலாம் குலோத்துங்க சோழனின் படை தலைவன் ஆவான், கருணாகர தொண்டைமானுக்கு பிறகு மிக சிறந்த படைதளபதியாக குலோத்துங்கன்னுக்கு விளங்கியவன் இவன் வேணாடு, மலைநாடு, பாண்டி நாடு, வடநாடு முதலிய நாடுகள் மீது போர் தொடுத்து மாபெரும் வெற்றி கொண்டவன் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது "தென்னாடன் சாவேற்றின் திண்செருக்கை அன்றமைத்தான் தொண்டையர்கோ னாங்கு போரில்  கொலைநாடு வெஞ்சினவேல் கூத்தன் குறுகார் மலை நாடு கொண்டபிரான் வந்து தென்னர், குடமலை நாடறிந்து கொண்ட வேற்கூத்தன் கொல்லம்  அழிவுகண்டான் சேரன் அளப்பரிய ஆற்றற் கிழிவுகண்டான் தொண்டையர்கோன் ஏறு தென்னர்  மலைமன்னர் ஏனை வடமன்னர் மற்றக் குலமன்னர் செல்வமெலாம் கொண்டு" இவர் விக்ரம சோழனின் ஆரம்ப காலங்களிலும் இருந்துள்ளார், விக்ரம சோழன் உலாவின்...

வேளைக்கார படையில் இருந்த வன்னியர்

Image
    இராஜேந்திர சோழன் காலத்தில் வேளைக்கார படையில் இருந்த  "கண்டன் வேளைக்காரன் பள்ளி வேழ்மா நம்பி"  இது பாண்டிய நாட்டிற்கு சென்ற சோழ படையின் கல்வெட்டு என்று குறிப்பிடுவதால், கல்வெட்டு கண்ட இடம் பாண்டிய நாடாக இருக்கலாம் வேளைக்கார படை என்பது தன் உயிரையும் கொடுத்து அரசனை காக்கும் மிக முக்கிய படைப்பிரிவாகும் இத்தகைய படையில் வன்னியர்கள் இருந்துள்ளனர் என்பது சோழர் காலத்தின் வன்னியர்களின் நிலை என்ன என்பதை எடுத்துரைக்கிறது.

பார்த்திபர் தம் தொழுகுலமாம் தில்லை

Image
சோழர் கால பெரும் புலவரான கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் அவர்கள் இயற்றிய மூவருலாவில் வரும் இராச ராச சோழன் உலா பாடல் - 47 :- "பார்த்திபர் தம் தொல்லைத் திருமரபுக் கெல்லாந் தொழுகுலமாம் தில்லைத் திருநடனஞ் சந்தித்து" என்று குறிப்பிடுகிறது. அதாவது, "தொன்மை மரபினரான சோழ வேந்தர்கள் வழிபடும் குல கடவுளான தில்லை நடராஜப் பெருமானின் திருநடனத்தை சேவித்து" என்று குறிப்பிடுகிறது.  இதன் மூலம், தில்லை நடராஜப் பெருமானே சோழ வேந்தர்களின் குல தெய்வம் என்று தெரியவருகிறது.  சோழப் பேரரசன் விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டுகளும், "தன் குல நாயகன் தாண்டவம் பயிலும் தில்லை அம்பலம்" என்று குறிப்பிடுகின்றன.

இராஜராஜன் பள்ளிப்படை எங்குள்ளது?

Image