கடந்தையார் - வங்கார முத்தரையர்
திட்டகுடி, பெண்ணாகடம், அரியலூர் பகுதிகளில் இவர்களின் கல்வெட்டுகள் மிகுதியாக கிடைக்கிறது, அதுவும் குறிப்பாக பிற்கால சோழர் காலத்தில் இவர்களின் சாசனங்கள் கிடைக்கின்றன, பாளையக்காரர் காலத்தில் இவர்களுக்கு கடந்தையார் என்கிற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கடந்தை என்பது பெண்ணாகடத்தின் பண்டைய பெயராகும்.
வங்கார முத்தரையர் என்று அழைக்கப்பட்ட இம்மன்னர்கள்
"கூத்தன் சேந்தன்"
"சேந்தன் கூத்தன்"
"சேந்தன் ஆதித்தன்"
என்பதையே பெரும்பாலும் பெயராக கொண்டிருந்தனர்,
விக்ரம சோழரின் காலத்தில் தான் இவர்களின் முதல் கல்வெட்டு சோழர் காலத்தில் கிடைக்கிறது
"கூத்தன் சேந்தன் வாணகுலராயன்" என்பவர் விக்ரமன சோழர் காலத்தில் அறியப்படுகிறார்
அவர் மகன் "சேந்தன் கூத்தாடுவன் இராஜராஜ வங்கார முத்தரையன்" இவரை "பள்ளி வெள்ளூர் பேரரையன் சேந்தன் கூத்தாடு தேவன்" என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது இவர் இராஜராஜன் & விக்கிரம சோழன் காலத்தவர்
மேலும் இதே காலகட்டத்தில் "கடந்தை சேந்தன் ஆதித்தன் இராஜராஜ வங்கார முத்தரையன்" என்பவர் அறியப்படுகிறார்
இவருக்கு பிறகு "ஆதித்தன் மண்டலி ஆன இராஜாதிராஜ வங்கார முத்தரையர்" என்பவர் இராஜாதிராஜ சோழன் காலத்தில் குறிப்பிடப்படுகிறார்
அதன் பின்பு "பொன்பரப்பினான் வீரவங்கார முத்தரையன்" மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்தவர்
அதே காலத்தில் "பலிகன் என்கிற இராசராச வங்கார முத்தரையர்" அறியப்படுகிறார்
மூன்றாம் குலோத்துங்க சோழனின் இறுதி ஆண்டுகளில் சிற்றரசுகள் பல கலகம் செய்து தனி அரசாக விளங்கி முயற்சி செய்தன, அவற்றில் வங்கார முத்தரையர்களும் ஒருவராவார், வேந்தன் பெயரை குறிப்பிடாமல் சில கல்வெட்டுகளை வெட்டியதால் இம்முடிவுக்கு வர வேண்டியுள்ளது, மேலும் இவர்களின் கல்வெட்டுகள் பெருவேந்தர்களுக்கு ஒப்பாக "உடையார்" என்ற அடைமொழியோடு காணக்கிடைக்கின்றன
இவர்கள் வன்னியர் குலத்தவர் என்பதை சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன, மேல் சொன்ன "சேந்தன் கூத்தாடுவன் இராஜராஜ வங்கார முத்தரையன்" அவர்களை பள்ளி குலத்தவர் என்பதை குறிப்பிடுகிறது
"பள்ளி வெள்ளூர் பேரரையன் சேந்தன் கூத்தாடு தேவன்"
மேலும் இவர்கள் வம்சத்தை சேர்ந்தவரை "வாணகுலராயன்" என்றும் குறிப்பிடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும், இவர்களின் தொன்மத்தை இது அதிகரிக்கிறது, அதாவது இவர்கள் வாணர்களின் கிளை என்பது புலப்படுத்துகிறது
மணிமேகலை காலத்துச் சோழ வேந்தனாகிய நெடுமுடிக் கிள்ளியின் தேவி சீர்த்தி யென்பவள் மாவலி மரபில் தோன்றிய ஓர் அரசன் மகள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார், இதனால் மணிமேகலை காலத்திலே மாவலி வாணர் மரபு இருந்துள்ளது என்பது தெளிவு
"நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்து தன்
அடியிற் படியை அடக்கிய வந்தாள்
நீரிற் பெய்த மூரிவார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு
...............
இந்திர திருவன் சென்றினி தேறலும்"
(மணிமேகலை 19. 51 - 116)
இது மட்டுமின்றி இவர்கள் வாணர் கிளை என்பதை வலுசேர்க்கும் விதத்தில் 7ஆம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர் நடுகல் கல்வெட்டு அமைகிறது, கல்வெட்டு வாசகம் -
"பொன்மாந்தானார்க்காய்ப் பட்டான் கடுவந்தையார் மகன் விற்சிதை கல் வாணகோக்கடமர்"
அதாவது கடந்தையார் மகனாக விற்சிதை வாணகோக்கடமர் குறிப்பிடப்படுகிறார், இதே நடுகல்லில் "வாணகோ முத்தரைசர் நாடு" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் வாணர் குலத்தவர் நாட்டில் இருந்தவராக இவர் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாகிறது
இவர்கள் 16ஆம் நூற்றாண்டிலும் கடந்தையார் என்ற பெயரில் அறியப்படுகின்றனர், பெண்ணாகடம் பகுதிகளை ஆட்சி செய்த பாளையக்காரர்களாக இவர்கள் அறியப்படுகின்றனர், அரியலூர் மழவராயரோடு திருமண உறவும் இவர்களுக்கு இருந்துள்ளது, தஞ்சை செப்பேடு இவர்களை வன்னியர் குலத்தவர் என்பதை குறிப்பிடுகிறது
"வன்னியர் குல கிரிலதரில் நாட்டுக் அதிபதியான குண்ணத்தூர் கட்டியப்ப நயினார் குமாரர் நாகய மழவராய நயினாரவர்களும், பெண்ணாடம் பிரளையங்காத்த கடந்தையார் கோத்திரத்தில் பொன்னளந்த கடந்தை குமாரன் பெரியநாயக்க நயினாரவர்களும்"
மேலும் இரண்டாம் இராஜாதிராஜன் காலத்தில் இராசகுலத்தவர் உழு குலத்தவர்களுக்கு உழவு செய்ய நிலங்களே இல்லாதளவு இராசகுலத்தவர்களே அனைத்து நிலங்களையும் விலை கொண்டு வாங்கியதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன, இந்த இராசகுலத்தவர்கள் பட்டியலில் வங்கார முத்தரையர்களும் இருந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
Comments
Post a Comment