வன்னியர்களை பற்றி தொல்லியல் துறையும், அறிஞர்களும் கூறியது -

 தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட "தமிழக வரலாறு சோழப் பெருவேந்தர் காலம் முதல் தொகுதி" நூலில் மலையமான்கள் வன்னியர் குலத்தவர்கள் என்பதை எழுதியுள்ளனர். அவர்களில் எழுதியது கீழே -


"கடலூர்/ விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் பகுதியில் ஆட்சிபுரிந்து வந்த குறுநில மன்னர்களே மலையமான்கள். அவர்கள் சேதிராயர் எனவும், கோவலராயர் எனவும், மலையன் எனவும், மலைய குலராயர் எனவும் கல்வெட்டுகளில் அழைக்கப்படுகின்றனர். அன்னோருக்கும் சங்ககாலத்தில் வாழ்ந்த மலையமான்களுக்கும் தொடர்புண்டா என்பது தெரியவில்லை. பிற்கால சோழர் காலத்தில் வாழ்ந்த மலையமான்கள் வன்னியர் வகுப்பை சேர்ந்தோர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. சோழர் ஆட்சியின் முற்பகுதியில் இம்மலையமான்களின் வரலாறு பற்றிய செய்தி இல்லாதது கவனிக்கத்தக்கது. இவர்களில் சிலர் திருக்கோயிலூரிலும், வேறு சிலர் கிளியூரிலிருந்தும் ஆட்சி செய்தனர்"

"Ancient to medieval south indian society in transition" என்னும் நூலில் அறிஞர் "Noboru Karashima" ஒரு மிக முக்கிய குறிப்பை எழுதியுள்ளார்.




"செங்கேணி சம்புவராயர்கள்" மற்றும் "மலையமான் சேதிராயர்கள்" ஆகியோர் பள்ளி இனத்தை சேர்ந்தவர்கள் என்று அறிஞர் அவர்கள் மிகவும் தெளிவாக எழுதியுள்ளார். சோழ சாம்ராஜ்யம் என்னும் சிம்மாசனத்தை தாங்கும் தூண்களில் இந்த சம்புவராயர்களும் மலையமான்களும் இருந்துள்ளனர்.

மேலும் பள்ளி இனத்தவர்கள் "வில்லாளிகளாக சோழப்படையில் விளங்கினர்" என்றும் எழுதியுள்ளார்.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???