வடபால் முனிவன் தடவினுள் தோன்றி' என்ற புறம்-201 வது பாடலுக்கு பழைய உரைகாரர், கதை உரைப்பின் பெருகும் அதை கேட்டுணர்க என்று கூறிச் சென்றுவிட்டார்கள்
அறிஞர் பெருமகன் திரு. ஐராவதம் மகாதேவன் ஐயா அவர்கள் எழுதிய "கொடுமணல் தாழியில் பழந் தமிழ் சொற்கள்" என்ற கட்டுரையில் கீழ்காணும் கருத்தினை பதிவுச் செய்திருக்கிறார்கள் :-
"தடவு என்பதற்கு 'ஓமகுண்டம்' என்றும் பொருள் உண்டு. அது இங்குப் பொருந்தாது. புறநானூறு 201 ம் பாடலில் 'வடபால் முனிவன் தடவினுள் தோன்றிய' என்ற வரியில் 'தடவு' என்ற சொல்லுக்குப் பழைய உரைகாரர் 'ஓமகுண்டம்' என்று பொருள் கூறியுள்ளதை மறுத்து மு.இராகவையங்கார் தமது வேளிர் வரலாறு என்ற அறிய ஆய்வு நூலில், தடா, தடவு 'பாத்திரம்' என்று நிறுவி உள்ளார்.
புறநானூற்று உரைகாரர் இந்த இடத்தில் 'கதை உரைப்பின் பெருகும், அது கேட்டுணர்க' என்று கூறிச் சென்றுவிட்டார். 'வடபால் முனிவன்' என்பது சம்பு முனிவன் என்பவரைக் குறிக்கும் என்ற வரலாறு உண்டு. ஆயினும், 'வடபால் முனிவன் தடவினுள் தோன்றி' என்ற பாடல் வரிக்கு, 'அகத்திய முனிவரின் தீர்த்த பாத்திரத்தில் தோன்றிய வேளிர்' என்று பொருள் கொள்வதே வேளிர் வரலாற்றுக்கு இயைந்ததாக உள்ளது. சங்க நூல்களில் அகத்தியரைப் பற்றி வரும் ஒரே குறிப்பு இதுவாகும்"
அறிஞர் பெருமகன் திரு. மு. இராகவையங்கார் ஐயா அவர்களின் கருத்தினை, அறிஞர் பெருமகன் திரு. மகாதேவன் ஐயா அவர்கள் ஏற்றார்கள் என்று தெரியவருகிறது என்பதாகும்.
புறநானூற்று 201 வது பாடலில் வரும் 'தடவு' என்ற சொல்லுக்குப் பழைய உரைகாரர் 'ஓமகுண்டம்' என்று பொருள் சொன்னதை மறுத்து தான் அறிஞர் பெருமகன் திரு. மு.இராகவையங்கார் ஐயா அவர்கள் புதிய கருத்தினைச் சொன்னார்கள் என்பதாகும்.
ஆனால், திரு. மு. இராகவையங்கார் ஐயா அவர்கள் சொன்ன கருத்தானது ஏற்புடையதல்ல என்று கல்வெட்டு சான்றுகளின் மூலம் இப்போது தெரியவருகிறது என்பதாகும். கி.பி.11-12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்யாணி சாளுக்கியர்களின் இரண்டு கல்வெட்டுகள் (சமஸ்கிருதம் மற்றும் கன்னடம்), "அகத்திய முனிவரின் ஓமகுண்டத்தில் தோன்றிய வன்னிய வம்சத்தவர்கள்" என்று மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றன என்பதாகும்.
மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1215) கல்வெட்டு ஒன்று, "சம்பு மாமுனிவனின் ஓமகுண்டத்தில் தோன்றிய வன்னியர்கள்" என்று குறிப்பிடுகிறது. கி.பி.12 ஆம் நூற்றாண்டின் சிலை எழுபது என்ற நூலானது "சம்பு மாமுனிவனின் ஓமகுண்டத்தில் தோன்றிய வன்னியர்கள்" என்று குறிப்பிடுகிறது. இதுபோல பல சான்றுகள் குறிப்பிடுகின்றன என்பதாகும். இந்த "சம்பு மாமுனிவர்" என்பவர் "அகத்திய மாமுனிவர்" என்பது அருணகிரிநாதர் அவர்கள் இயற்றிய திருப்புகழ் பாடலின் மூலமாக தெரியவருகிறது என்பதாகும். அப் பாடலானது, "சிவனைநிகர் பொதியவரை முனிவன்" என்று அகத்திய முனிவரை சிவனுக்கு நிகரான முனிவராக (சம்பு மாமுனிவராக) குறிப்பிடுகிறது என்பதாகும்.
கம்போடிய தேசத்து பல்லவ அரசர்களும் தங்களை "சம்பு முனிவர் வழிவந்தவர்கள்" என்றும் "அகத்திய முனிவர் வழிவந்தவர்கள்" என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர் என்பதாகும். காடவர்களான பல்லவர் என்பவர்கள் "வன்னிய வம்சத்தவர்கள்" என்பது வரலாறு ஆகும். மேலும், புறநானூற்றுப் பழைய உரைகாரர் சொன்ன :-
"வடபான் முனிவன் றடவினூட் டோன்றி என்பதற்குக் கதை யுரைப்பிற் பெருகும் அது கேட்டுணர்க"
என்ற மிக முக்கிய குறிப்பானது இதுவரை ஆராயப்படமால் இருந்தது என்பதாகும். இந்த வாக்கியத்தை மிக நுட்பமாக பார்க்கும்பொழுது, பழைய உரைகாரர், "சம்பு மாமுனிவனின் ஓமகுண்டத்தில் தோன்றிய வன்னியர்களின் வரலாறுக் கதையை" நான்கு தெரிந்து வைத்திருந்தார் என்று தெரியவருகிறது. அவர் மட்டுமல்லாது பலரும் இந்த கதையை அறிந்திருந்த காரணத்தினால் தான், "கதை யுரைப்பிற் பெருகும் அது கேட்டுணர்க" என்று கூறிச் சென்று விட்டார்கள் என்பதாகும். இந்த கதையானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், எனவே அதை மீண்டும் சொன்னால் தனது உரையானது பெருகும் என்று பழைய உரைகாரர் கருதினார்கள் என்பதாகும்.
Article By - Shri Murali Nayakar
Comments
Post a Comment