மறவர் என்பது சாதியா?
கல்வெட்டில் தேவர் என்று வந்தாலோ அல்லது மறவன் என்று வந்தாலோ அது தங்கள் ஜாதியைத்தான் குறிக்கும் என்று நினைத்துக்கொண்டு அனைத்து மன்னர்களையும் வேடர் குல மறவர் உரிமைக்கோருவது வழக்கம்.
அந்த வகையில் பழுவேட்டரையர்களின் பெயரில் மறவன் கண்டன், கண்டன் மறவன் என்று வருவதை வைத்து அரியலூர் அருகே ஆட்சி செய்த பழுவேட்டரையர்கள், மலை நாட்டை ஆண்ட மலையமன்னர், வன்னாடு உடையார் என பலரை தங்கள் வம்சம் என உரிமைகோரிவருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே
இதனை முறியடிக்கும் விதமாக மறவன் என்பது ராஜராஜ சோழன் காலத்தில் பொதுப் பெயராக பயன்படுத்தப்பட்டுள்ளதை கீழ்காணும் கல்வெட்டு உறுதி செய்கிறது.
தென்னிந்திய கல்வெட்டு தொகுதி -3-ல் 19 எண்ணில் இடம்பெற்றுள்ள இந்த கல்வெட்டில் ”சங்கரப்பாடியான் கண்டன் மறவனான சோழேந்திர சிங்க மாயிலாட்டி” என்ற வணிக குலத்தவன் குறிப்பிடப்பட்டுள்ளான்.
இதன் மூலம் “ சங்கரப்பாடியான் என்ற எண்ணெய் வாணிபம் செய்யும் கண்டன் மறவன் என்ற பெயர் கொண்டவன் மாயிலாட்டி என்ற வணிகர் குலத்தவன் என்பது உறுதியாகிறது.
Comments
Post a Comment