பார்த்திபர் தம் தொழுகுலமாம் தில்லை


சோழர் கால பெரும் புலவரான கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் அவர்கள் இயற்றிய மூவருலாவில் வரும் இராச ராச சோழன் உலா பாடல் - 47 :-

"பார்த்திபர் தம் தொல்லைத் திருமரபுக் கெல்லாந் தொழுகுலமாம் தில்லைத் திருநடனஞ் சந்தித்து"

என்று குறிப்பிடுகிறது. அதாவது, "தொன்மை மரபினரான சோழ வேந்தர்கள் வழிபடும் குல கடவுளான தில்லை நடராஜப் பெருமானின் திருநடனத்தை சேவித்து" என்று குறிப்பிடுகிறது. 

இதன் மூலம், தில்லை நடராஜப் பெருமானே சோழ வேந்தர்களின் குல தெய்வம் என்று தெரியவருகிறது. 

சோழப் பேரரசன் விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டுகளும், "தன் குல நாயகன் தாண்டவம் பயிலும் தில்லை அம்பலம்" என்று குறிப்பிடுகின்றன.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???