சாளுக்கிய குலத்தவர் (சாளுவர்)

விஜயநகர வேந்தர் மல்லிகார்ஜுன தேவ மஹாராயரின் அரியலூர் மாவட்ட உஞ்சினி செப்பேடு (கி.பி.1463) ஒன்று அவரை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது (Avanam Journal - 19) :-




"மகா கண்ட கட்டாரி சாளுவன்"

"சாளுவ குல திலகன்"

"திரிபுவனங் கட்டாரி சாளுவன்"

"சம்பு மாமுனியார் யாகத்தில் அவதரித்தானவர்"

"மகா வீரப் பிரதாபர்"

"அக்கினிப் புரவி யுள்ளவர்"

சாளுக்கிய வம்சத்தில் (சாளுவ வம்சத்தில்) தோன்றிய விஜயநகர வேந்தர் மல்லிகார்ஜுன தேவ மஹாராயர் அவர்களை இந்த செப்பேடு, சங்கத் தமிழ் புறம்-201 வது பாடல் குறிப்பிடும் "வடபால் முனிவன் (சம்பு மாமுனிவன்) யாககுண்டத்தில் தோன்றிய வேளிர் வம்சத்தவர்" என்று குறிப்பிடுகிறது. சாளுவர் என்றால் யாககுண்டத்தில் தோன்றியவர் என்பது பொருளாகும். 

  இந்த செப்பேடு காணியாட்சி வழங்கியதைப் பற்றியும் அதன் எல்லைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.  இந்த செப்பேட்டில் முக்கியமான வாசகம் ஒன்று இடம்பெற்றுள்ளது என்பது மிகப்பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. வாசகம் வருமாறு :-

"யிந்தப்படி பெண்ணாடகம் பெறனயங் காத்த தன்ம்பிறான் கோயில் உள் மதிளில் மேலச்சிகரத்தில் எட்டாங் கல்லில் கல்வெட்டெழுத்துப் பார்த்துக் கொள்ளவும் யிந்தக் காணியாக்ஷிச்சிக்கி அகுதம் சொன்ன பேர்கள் கெங்கை கரையிலே"  (செப்பேடு வரிகள் 71 - 78).

இந்த செப்பேட்டின் (கி.பி.1463) நகலானது பெண்ணாடம் சிவன் கோயிலில் கல்வெட்டாக இருப்பதை செப்பேட்டின் வாசகம் ஒன்று தெரிவிக்கின்றது.  எனவே, இந்த செப்பேடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடாக கருதப்படுகிறது.  ஏனென்றால் இந்த செப்பேட்டின் வாசகம் கோயில் கல்வெட்டிலும் இடம்பெற்றுள்ளது  இந்த கல்வெட்டை படியெடுத்து பதிப்பிக்கவேண்டும்

மேலும், விஜயநகர வேந்தர் மல்லிகார்ஜுன தேவ மஹாராயர் அவர்களுக்கு "சம்பு குல பன்னாட்டார்கள்" விழா எடுக்கவேண்டும்.   


Article By - Shri Murali Nayakar

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???