பள்ளசூளகரை ஐராவத ஈஸ்வரர் கோயில் கல்வெட்டு
பள்ளசூளகரை ஐராவத ஈஸ்வரர் கோயில், சூளகரை வெள்ளானை விடங்கற்கு தானம் கொடுத்த 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மலையமான் அரசன் கல்வெட்டு
1) உடையார் வெள்ளானை விடங்
2) கற்கு ஆடையூர் நாடாழ்வா
3) னேன் வன்னிய மக்கள் நாயனார்கு
4) சந்திக்கு அமுதுபடிக்கு மாவேந்த _
5) _ நஞ்சை, புஞ்சை நாபாலால்லை
6) யும் விட்டேன். இத்தந்மத்தை வி
7) லக்குவான் கெங்கை கரையில் கு
8) ராப் பசுவைக் கொன்றான் பாவம் _ _ .
இறைவன் வெள்ளானை விடங்கருக்கு வன்னியர் குல தலைவனான மலையமான் அரசன் ஆடையூர் நாடாழ்வானும் அவன் படையாள்களும் காலை, மாலை இரு பொழுது படையலுக்காக மாவேந்த- - என்னும் இடத்தில் அமைந்த நஞ்சை, புஞ்சை நிலத்தை தானமாக கொடுத்தனர். இந்த அறத்தை நடவாமல் நிறுத்துபவன் கங்கை கரையில் காரம்பசுவை கொன்றவன் அடையும் பாவத்தை தானும் அடைவான்.
Comments
Post a Comment