ஓவியர் குடி

 

சங்க தமிழ் காலத்தில் வாழ்ந்த மன்னர் மரபினர்களில் ஓவியர் அரசகுடிகளும் ஒரு குடியினர் ஆவர். கடையெழு வள்ளல்களில் ஒருவர் என்று புகழப்பட்ட ஓய்மான் நல்லியக்கோடனன பெற்றதும் இந்த ஓவியர் குடியே ஆகும். இவர்கள் அரசாட்சி செய்த பகுதி ஓய்மாநாடு என்று அழைக்கப்பட்டது. இது இன்றைய திண்டிவனம் பகுதியாகும். இவர்களின் தலைநகரம் கிடங்கில் ஆகும். இவன் ஆட்சி செய்த பகுதி பெரிய மதில்களையும், மலைகளையும் கொண்டது, துறைமுகங்களை கொண்டது, மிகவும் செழிப்பான பகுதியினை கொண்டதாகும்

இந்த ஓவியர் குடியில் பிறந்த புகழ்பெற்ற அரசர்கள் நல்லியகோடன் மற்றும் வில்லியாதன் ஆகியோர் ஆகும்

நல்லியக்கோடன் தொன்மாவிலங்கை என்னும் இலங்கை தீவில் கருவுற்று தமிழ்நாட்டில் குடிபெயர்ந்து வந்து இங்குள்ள பகுதியை தலைமையேற்று ஆண்ட போது அப்பகுதிக்கு நன்மாவிலங்கை என்று தான் கருவுற்ற இடத்தின் நினைவாக பெயர் சூட்டியுள்ளார், இவரை "ஓவியர் பெருமகன்" என்றும் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. ஓவியர் குடியினர் குற்றம் நேராதவாறு அரசாண்டவர்கள், வாய்மை காத்து புகழோடு விளங்கியவர்கள். ஓவியர் இனத்தவர்கள் நாகர்கள் என்றும் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

"றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய நன்மா விலங்கை மன்ன ருள்ளும் மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்" (சிறுபாண். வரி. 1197)

பகைவரை பின்புறம் நின்று தாக்காமல் மார்பிலும் முகத்திலும் வாளால் வெட்டி வீழ்த்துவதால் உணவிற்காக வேட்டையாடும் புலியை போல அஞ்சாமை கொண்டவன் என்று ஓவியர் பெருமகன் நல்லியக்கோடனின் வீரம் புகழ்ந்து கூறப்படுகிறது. இதனால் இவர்கள் வாட்போரில் வல்லவர்கள் என்பது தெளிவாகும்

இத்தகைய ஓவியர் குடியினர் பள்ளி இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை சுந்தரச்சோழரின் கல்வெட்டு ஒன்று தெளிவாக குறிப்பிடுகிறது -


"ஓமயிந்தன் முன்நூற்றுவன் பள்ளியாந கரணமாணிக்கம்" (ARE. 280/1901)

ஓமயிந்தன் என்பது ஓய்மான் என்பதன் மறுவடிவம் ஆகும். மைந்தன் என்பதும் மான் என்பதும் ஒரே பொருளாகும். எனவே ஓய்மான்கள் பள்ளி இனத்தவர்கள் ஆகும்

நல்லியக்கோடனின் அரண்மலை வாயில் மலை கண் விழித்து இருப்பது போல திறந்திருக்குமாம். கிணை வாசிக்கும் பொருநருக்கும், புலவருக்கும், அந்தணருக்கும் அவ்வாயில் என்றும் திறந்தே இருக்குமாம்

"பொருநர்க் காயினும் புலவர்க் காயினு மருமறை நாவி னந்தணர்க் காயினுங் கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன அடையா வாயிலவ னருங்கடை குறுகிச்" (சிறுபாண் 205)

அவர்களுக்கு அளவற்ற பொருள்களை கொடுப்பவன் நல்லியக்கோடன். தேர், குதிரை, யானை, அணிகலன் முதலியவற்றை ஈகையாக கொடுப்பவன் என்று மிக விரிவாக சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது

வீரமும், கொடையும் ஒருங்கே பெற்ற புகழுடையவர்கள் ஓவியர் குடி என்பது வன்னியர் குலமாகும்.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???