மறவர் என்பது சாதியா?
மறவர் என்பது பண்பு பெயரே அன்றி அது சாதியை குறிக்கும் சொல்லாக நாம் பார்க்க கூடாது, மறவர் என்பது எங்கு வந்தாலும் அது பெரும்பாலும் வீரத்தை குறித்து பொதுவாகவே வந்துள்ளது
"இடையன் தனியன் மறவன்" ஆயர் குலத்தவர் கல்வெட்டு.
" சுருதிமான் செங்குளவன் மறவனான விசைய நாராயண தேவன்" தேவன் என்றே பட்டம் கொண்ட சுருதிமான் ஜாதியினருக்கு மறவர் பெயர் இருந்துள்ளது.
"மறவடிகள் சதாசிவப்பட்டர்" பிரமாணருக்கு மறவர் என்று பெயர் இருந்துள்ளது.
சங்க கால இலக்கியமான பெருங்கதையில் அந்தணான வயந்தகன் என்பவரை "வாட்படை மறவன்" என்று கூறியுள்ளார்கள், அந்தணர் அரக்கன் இராவணனை மறவன் என்றுள்ளார்கள் கம்பர்.
ஏனாதி நயினார் என்கிற நாடார் அவர்களின் உறவினரை "மறப்படை வாட் சுற்றத்தார்" என்று சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார்
எனவே மறவர் என்ற பொதுவான சொல்லை வைத்து கொண்டு முக்குல வேட்டுவ மறவர் எவ்வாறு பல அரசுகளை உரிமை கோருகிறார்கள் என்பது தெரியவில்லை.
Comments
Post a Comment