சிந்து சமவெளிப் பற்றி அறிஞர் பெருமகன் திரு. ஐராவதம் மகாதேவன் ஐயா அவர்களின் சில முக்கிய கருத்துக்கள்








ஹரப்பன்.காம் என்ற இணையத்தில், சிந்து சமவெளிப் பற்றி அறிஞர் பெருமகன் திரு. ஐராவதம் மகாதேவன் ஐயா அவர்களின் கருத்துக்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பெற்றுள்ளன.  அதில் சில முக்கிய கருத்துக்கள் வருமாறு :-


Do we have any evidence of a migration from to Indus to South India ?


I believe that there was a substantial migration from the Indus valley to South India at the end of the Indus civilisation.  Old Tamil poems mention about migration from Dwaraka in Gujarat to Tamil Nadu via Konkan, Tulu and Kongu regions.


What single connection between the ancient Indus civilization and modern Tamil culture is the most impressive to you ?


The single most important connection between Indus Valley Civilization and the ancient Tamil country is the reference to the migration of people under the leadership of Agastya starting from Dwaraka and going on into the Tamil country.  As this story is already very old in the sangam age it must refer to an ancient migration following the collapse of the Indus civilization.  The single most important element connecting the Indus civilization with modern Tamil culture is the Kavadi, the ceremonial yoke used to carry offerings to the deity.  As Parpola has shown in one of his earlier papers (1981), the yoke and the name Kavadi are even now found all over India.


About the Signs and Castes in the Indus Valley, the great scholar Dr. Iravatham Mahadevan sir has answered the following :-


What is more, the same symbol in the Indus valley could have taken multiple forms later.  The jar sign is one example.  Kunda is both jar and the fire pit.  In later India, there are communities which claim to have arisen from the jar, and other from the fire pit.  Now both have the same word and both could be two very different responses to the same common traditions.


இதன் தமிழாக்கம் :-


சிந்து சமவெளிப் பகுதியில் இருந்து தென் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்ததற்கான சான்றுகள் நம்மிடம் இருக்கின்றனவா ? 


சிந்து சமவெளிப் பகுதியின் கடைசிக்காலத்தில் அங்கிருந்து தென் இந்தியாவிற்கு கணிசமான புலப்பெயர்வு இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.  குஜராத் துவாரகைப் பகுதியில் இருந்து தமிழ் நாட்டிற்கு புலப்பெயர்வு இருந்ததை சங்கத் தமிழ் பாடல்கள் குறிப்பிடுகின்றன. கொங்கன், துளு மற்றும் கொங்குப் பகுதிகளின் வழியாக இப் புலப்பெயர்வு இருந்திருக்கவேண்டும்.


பண்டைய சிந்து சமவெளிக்கும் மற்றும் நவீன தமிழ் பண்பாட்டிற்கும்  உள்ள எந்த ஒரு தொடர்பானது உங்களை மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது ?


சிந்து சமவெளிக்கும் மற்றும் பண்டைய தமிழ் நாட்டிற்கும் உள்ள ஒரு மிக முக்கிய தொடர்பைப் பற்றி குறிப்பிடும் சான்றானது தெரிவிப்பது என்னவென்றால், அகத்திய முனிவர் அவர்களின் தலைமையில் துவாரகையில் இருந்து தமிழ் நாட்டிற்கு புலம்பெயர்ந்தது பற்றியதாகும்.  சங்க காலத்திலேயே இந்த கதையானது மிகப் பழமைவாய்ந்ததாக இருக்கின்றபடியினால், இது நிச்சயமாக சிந்து சமவெளி நாகரீகம் வீழ்ச்சியுற்ற காலத்தில் நடைப்பெற்ற மிகப் பண்டைய புலப்பெயர்வைப் பற்றி குறிப்பதாகும்.  சிந்து சமவெளி நாகரிகத்தையும் மற்றும் நவீன தமிழ் பண்பாட்டினையும் இணைக்கும் ஒரு மிக முக்கிய கருவியானது காவடியாகும். இந்த காவடி என்பது  இறைவழிபாட்டிற்காக பூஜை பொருட்களை சுமந்து செல்லும் ஒரு கருவியாகும்.  அறிஞர் பர்போலா அவர்கள், 1981 ஆம் ஆண்டு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில், காவடி என்னும் கருவியானது இன்றும்கூட இந்தியா முழுவதும் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்கள். 


சிந்து சமவெளி முத்திரைகள் மற்றும் சமூகங்கள் பற்றிய கேள்விக்கு அறிஞர் பெருமகன் திரு. ஐராவதம் மகாதேவன் ஐயா அவர்கள் கீழ் கண்டவாறு பதிலளித்துள்ளார்கள் :-


சிந்து சமவெளி முத்திரைகள் என்பது பிற்காலங்களில் பல வடிவங்கள்  எடுத்திருக்கலாம்.  இதற்கு ஒரு உதாரணம் பாத்திர முத்திரையாகும்.  குண்டம் என்பது பாத்திரம் மற்றும் அக்னி குண்டம் என்ற இரண்டையும் குறிப்பிடுவதாகும். பிற்கால இந்தியாவில் இருக்கும் சில மரபினர்கள் தங்களை பாத்திரத்தில் இருந்து தோன்றியவர்கள் என்றும் சிலர் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.  இப்போது இவை இரண்டும் {பாத்திரம் (Jar) மற்றும் அக்னி குண்டம் (Fire-Pit)} சமசொற்களாகும்.  இவை இரண்டும் வெவ்வேறு பதில்களையுடைய ஒரு பொதுவான மரபினை உடையதாக இருக்கலாம். 


இவ்வாறு அறிஞர் பெருமகன் திரு. ஐராவதம் மகாதேவன் ஐயா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

  

-----------------------------------------------------  


மேற்குறிப்பிட்ட கருத்துக்களில் இருந்து பெறப்படும் முக்கிய வரலாற்று உண்மைகள் :- 


"சிந்து சமவெளிப் பகுதியின் கடைசிக்காலத்தில் அங்கிருந்து தென் இந்தியாவிற்கு கணிசமான புலப்பெயர்வு இருந்திருப்பதை சங்கத் தமிழ் இலக்கிய பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்பதாகும்"


"அகத்திய முனிவர் அவர்களின் தலைமையில், சிந்து சமவெளிப் பகுதியான துவாரகையில் இருந்து தமிழ் நாட்டிற்கு புலப்பெயர்வு நடைபெற்றிருக்கின்றது என்பதாகும்"  


"சங்க காலத்திலேயே இந்த துவாரகையில் இருந்து புலம்பெயர்ந்த நிகழ்வானது மிகப் பழமை வாய்ந்தவையாக புலவர் கபிலர் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளமையால், இது நிச்சயமாக சிந்து சமவெளி நாகரீகம் வீழ்ச்சியுற்ற காலத்தில் நடைப்பெற்ற மிகப் பண்டைய புலப்பெயர்வைப் பற்றியது என்பதாகும்"

 

"சங்கத் தமிழ் புறம் பாடல் குறிப்பிடும் அக்னியில் தோன்றிய  கதையானது மிக மிக தொன்மைவாய்ந்த கதையாகும்.  இந்த கதையானது இன்றும் இந்தியாவில் இருக்கும் க்ஷத்ரிய சமூகங்களால் வழங்கப்பட்டுவருகிறது என்பதாகும்"


"அறிஞர் பெருமகன் திரு. உ.வே. சாமிநாத ஐயர் ஐயா அவர்களும், அறிஞர் பெருமகன் திரு. ஐராவதம் மகாதேவன் ஐயா அவர்களும், வடபால் முனிவர் என்பவரை 'சம்பு மாமுனிவராக' இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள் என்பதாகும்.  வடபால் முனிவன் என்பவரை  அறிஞர் பெருமகன் திரு. ஐராவதம் மகாதேவன் ஐயா அவர்கள் 'அகத்திய முனிவர்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்"   


"பாதாமி சாளுக்கியர்களின் கி.பி. 11 & 12 ஆம் நூற்றாண்டின் சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழி கல்வெட்டுகள், 'அகத்திய முனிவரின் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றிய வன்னிய வம்சத்தவர்கள்' என்று  குறிப்பிடுகின்றன"


"ரிக் வேதம், பாத்திரத்தில் பிறந்த அகத்திய முனிவரையும் மற்றும் வஷிஸ்ட முனிவரையும் ஒரே தந்தைக்கு பிறந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது" 


"கி.பி. 11 ஆம் நூற்றாண்டின் நாக்பூர் சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று, ராஜபுத்திர வம்சத்து பிரம்ம க்ஷத்ரியர்களான பர்மார்களை (Rajput Parmars), 'வஷிஸ்ட முனிவரின் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றிய வன்னிய வம்சத்தவர்கள்' என்று குறிப்பிடுகிறது" 


"கி.பி.12 ஆம் நூற்றாண்டின் சிலை எழுபது என்ற நூலானது, 'சம்பு மாமுனிவன் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றிய வன்னிய வம்சத்தவர்கள்' என்று குறிப்பிடுகிறது"


"மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கி.பி.1215 ஆம் ஆண்டின் கல்வெட்டு ஒன்று, 'சம்பு மாமுனிவன் வேள்வி குண்டத்தில் இருந்து  தோன்றிய பன்னாட்டார்களான வன்னியர்கள்' என்று குறிப்பிடுகிறது"


"கி.பி.1463 ஆம் ஆண்டின் உஞ்சினி செப்பேடானது, சாளுவ குல மல்லிகார்ஜுன தேவ மகாதேவராயர் அவர்களை, 'சம்பு மாமுனிவன் வேள்வி குண்டத்தில் இருந்து தோன்றியவர்' என்று குறிப்பிடுகிறது"     


எனவே, மேற்குறிப்பிட்ட சான்றுகளின் மூலமாக தெரியவரும் கருத்து என்னவென்றால், வடபால் முனிவன் என்ற அகத்திய முனிவரின் (சம்பு மாமுனிவர்) அக்னி குண்டத்தில் இருந்து  தோன்றிய வன்னிய வம்சத்தவர்கள், சிந்து சமவெளிப் பகுதியில் இருந்து மிகப் பண்டைய காலத்தில் தென்னிந்தியாவிற்கு புலம்பெயர்ந்து வந்தார்கள் என்பதாகும்.  இதுவே வரலாற்று உண்மையாகும்.


Article By - Shri Murali Nayakar

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???