வங்கார முத்தரையர் எழுப்பிய கோயில்கள்
வங்கார முத்தரையர் என்பவர் சோழர் கீழ் பெண்ணாடம், திட்டக்குடி போன்ற பகுதிகளை ஆட்சி செய்தவர்கள்.
இவர்களை கல்வெட்டு "பள்ளி காணியுடைய வங்கார முத்தரையர்" என்று குறிக்கிறது. இவர்கள் பிற்காலத்தில் பாளையக்காரர்களாகி போயினர் அவர்கள் "கடந்தையார்" என்கிற பெயரோடு வாழ்ந்தனர். இதனை பற்றி அறிஞர் இல. தியாகராஜன் கடந்தையார் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இவர்கள் பற்றிய செய்திகள் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது.
இவர்களை பற்றிய ஒரு முக்கிய குறிப்பு ஒன்று இவர்கள் எழுப்பிய நான்கு கோயில்களை பற்றி குறிப்பிடுகிறது.
இவர்களில் வங்கார முத்தரையர் என்பவர் பெரியாக்குறிச்சியில் இராஜேந்திரசோழீஸ்வரமுடையார், மற்றும் புகழாபர விண்ணகராழவார் என்று சிவன் மற்றும் பெருமாள் கோயில்களை எழுப்பியுள்ளார். அதே போல் கொடுக்கூர் என்ற ஊரில் திருச்செந்தீஸ்வரமுடையார் மற்றும் வேதநாயகவிண்ணகராழ்வார் என்கிற சிவன் மற்றும் பெருமாள் கோயில்களை எழுப்பியுள்ளார்.
Comments
Post a Comment