சோழர்களின் சாதி என்ன? - Caste of The Great Cholas

கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராஜராஜசோழனை வென்று அதனை தன் மெய்க்கீர்த்தியில் முதன்மையாக பதிவு செய்தான், சோழன் பெரும் வேந்தன் என்பதால் அவனை யானையாக பாவித்து தன்னை சிங்கமாக பாவித்து "யானையை வெற்றி கொண்டு சிறையில் அடைத்த சிங்கம்" என்றெல்லாம் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளான் 

"பெருங்களிற்று சோழனையு மைச்சரையும் பிடித்து சிறையிலிடக் களிறுவிடு மிண்டன் சீயா"(EI vol-28 page - 180,181)

களிற்று - யானை, சீயா - சிங்கம்

மேலும் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் குலோத்துங்க சோழனின் மகளை மணந்து தில்லையில் வீதியுலா வந்ததையும் கல்வெட்டில் பதிவு செய்துள்ளான், மூன்றாம் குலோத்துங்கனின் மகனே மூன்றாம் இராஜராஜன், அதாவது மூன்றாம் இராஜராஜன் என்பவன் கோப்பெருஞ்சிங்கன்னுக்கு மச்சான் முறை, மூன்றாம் இராஜராஜனின் சகோதிரியை தான் திருமணம் செய்துள்ளான்

சோழ பேருவேந்தனை வெற்றி கொண்டு அண்ணமங்களம் குகையில் சிறைப்பிடித்து வைத்திருந்திருக்கான், அங்கு தொல்லியல் சுவடுகள் இன்றும் கிடைக்கின்றன



அப்பகுதியில் ஒரு யானையை சிங்கம் விழுங்குவது போல் சிற்பம் வடித்து அந்த யானையின் கண் புருவத்தில்


"சொக்கப் பல்லவன் வாய் செ ல்லும் வன்னிய மணாளன்"(கல்வெட்டு காலண்டிதழ் 98, பக்கம் - 32,33) என்று கல்வெட்டு வெட்டிவித்தான்

இந்த கல்வெட்டில் தன் மச்சானான மூன்றாம் இராஜராஜ சோழன் ஒரு வன்னியன் என்பதை குறிப்பிடுகிறான், கல்வெட்டு என்பது கோப்பெருஞ்சிங்கனின் முன்னோக்கில் அமைந்துள்ளது, அதாவது அரச குலத்தவன்னான பல்லவ கோப்பெருஞ்சிங்கனின் பார்வையில் தன் மச்சான் சோழன் ஒரு வன்னியன் என்பதை "வன்னிய மணாளன்" என்று குறிப்பிட்டு கல்வெட்டியுள்ளான்

பல்லவன் தன் மச்சானை சாளுக்கியன் என்பதால் சொன்னானா அல்லது சோழன் என்பதால் சொன்னான்னா என்பதெல்லாம் தெரியவில்லை, ஆனால் இந்த ஒற்றை கல்வெட்டால் சோழர் மற்றும் சாளுக்கிய வேளிர் இருவருமே வன்னியர்களே என்பது புலப்படுத்துகிறது

*இராஜராஜனின் சதய திருநாள் சோழ வம்சத்தவர் முன்னிலையில் உடையாளூரில் நேற்று நடைபெற்றது*

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???