மிழலைக் கூற்றத்தை அரசாட்சி செய்த நீலகங்கரையர்கள்

  




க்ஷத்ரிய மன்னர்களாகிய "பாணர்கள்" (என்கிற) "வாணர்கள்" "புவனேகவீரன்", "சமரகோலாகலன்" என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்பெற்றனர் என்பதை சான்றுகள் நமக்கு தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் சபாநாயகம் சன்னிதியில் உள்ள கல்வெட்டு ஒன்று "வாணர் குல அரசனுடையது". அக் கல்வெட்டில் வாணகோவரையன் அவர்கள் கிழ் கண்டவாறு தெரிவிக்கிறார்கள் :-

"மிழலைக்கூற்றத்து அம்மான் நீலகங்கரையர் உடன் கற்பிக்கையில் இம்மரியாதியிலே உடையார் ஏகாம்பரநாதனுக்கும் நாச்சியார் காமாக்ஷிக்கும் புவனெகவீரன் சந்தியாக ஒரு சந்திபூசையும் மாதம் பிறந்தநாள்தொறும் விசெழபூசையும் நடக்கும் படிக்கு அமுதுபடி கறியமுது நெய்யமுது சாத்துப்படி திருப்பரிவட்டம் திருமாலை திருவிளக்கு உட்பட்ட தெவதானங்களுக்கும் நாம் தெவதானம் ஆக விட்ட சமரகொலாகலநல்லூற்கும் புவனெகவீரநல்லூற்கும்" (Line 3 & 4, South Indian Inscriptions, Vol-IV, No.348).

க்ஷத்ரிய வேந்தனான "வாணகோவரையன்" அவர்கள், தன்னுடைய உறவினரான (அம்மான் = தாய்மாமன்) நீலகங்கரையர் அவர்கள் சொன்னவுடன், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதருக்கும் காமாட்சி அம்மனுக்கும் தானம் கொடுத்திருக்கிறார் என்று தெரியவருகிறது. நீலகங்கரையர்கள் என்பவர்கள் ஆவணங்களில் "பள்ளி" என்றும் "வன்னிய நாயன்" என்றும் "சம்பு குலத்தவர்" என்றும் குறிப்பிடப்பெற்றனர்.

நீலகங்கரைய மன்னர்கள் மிழலைக்கூற்றத்தை அரசாட்சி செய்திருக்கிறார்கள் என்பது இந்த கல்வெட்டின் வாயிலாக தெரியவருகிறது. மிழலைக்கூற்றம் என்பது புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதியாகும். இந்த மிழலைக்கூற்றத்தை சங்க காலத்தில் வேளிர் மரபின மாவேள் எவ்வி அவர்கள் அரசாட்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. பிடவூர் இருங்கோவேள் அவர்களும் இந்த எவ்வி தொல்குடியைச் சேர்ந்தவர் என்பதை புலவர் கபிலர் அவர்கள் புறம் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

வாணகோவரையர், நீலகங்கரையர், பல்லவராயர் ஆகியோர் வேளிர் மரபினர்கள் என்பதை சான்றுகள் தெரிவிக்கின்றன. வேளிர் மரபினர்கள் என்றால் வேள்வி குண்டத்தில் தோன்றிய மரபினர்கள் என்பதை சங்கத் தமிழ் புறம் பாடல்-201 தெரிவிக்கின்றது. 

சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவானது,  பல்லவராயர்களை "குரிசில்" என்றும் "வேளிர்" என்றும் தெரிவிக்கின்றது. எனவே, மிழலைக் கூற்றத்தை வேளிர் மரபினர்கள் தங்களது கட்டுப்பாட்டில் சங்க காலம் முதல், கி.பி.17 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை வைத்திருந்தனர் என்று தெரியவருகிறது.

Article By - Shri Murali Nayakar

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???