சிங்கவரம் - 1755ஆம் ஆண்டு வன்னியர் குலம் கல்வெட்டு

செஞ்சி அருகே சிங்கவரம் ரங்கநாதர் சுவாமிக்கு கருங்கல் மண்டபம் கட்டி புண்ணியம் தேடிய பழங்கால மன்னரின் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் ஊராட்சி சாவடிப் பகுதியில் பழைமையான கருங்கல் மண்டபம் உள்ளது. கி.பி. 1755-இல் கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் வண்ணங்கள் தீட்டப்பட்டு ஓவியங்கள் இருந்து அழிந்துள்ளன. மேலும், மண்டபத்தின் சிறப்பு குறித்து இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டைக் கண்டறிந்த கல்வெட்டு ஆய்வாளரும், விழுப்புரம் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியருமான த.ரமேஷ், அந்தப் பகுதி தொல்லியல் ஆர்வலர் பொறியாளர் மணி ஆகியோர் கூறியதாவது: சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் மண்டபத்தின் கல்வெட்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில், இன்றளவும் தை அமாவாசையில் சிங்கவரம் சுவாமி ரங்கநாதர் வருகை தருவதாக நம்பிக்கை வைத்து, கோயில் உற்சவரைக் கொண்டுவந்து விழா நடத்தி அன்னதானம் செய்கின்றனர். மண்டபத்தின் எதிரே பாறையின் இடையில் நீர் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சரிவான பகுதியில் தடுப்புச் சுவரை கட்டமைத்து தண்ணீரைச் சேமித்து வைத்துள்ளனர். அண்மையில் ஆ...