2100 ஆண்டுகளுக்கு முன் இருந்த அக்னி குலத்தின் குறிப்பு - Satavahana

நூற்றுவர் கன்னர் என்கிற சதகர்னி அரசு இன்றைய கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என பெரும் பகுதியை 2100 வருடங்கள் முன்பு ஆட்சி செய்த பேரரசு

சதகர்னிகளின் தளபதிகளாக இருந்தவர்கள் தான் மேலை கங்கர், சாளுக்கியர், பல்லவர், வாணாதிராயர் என்ற கூற்று உண்டு அதற்கு சில சான்றுகளும் உண்டு


இத்தகைய சதகர்னி சாதவாகன அரசர் ஒருவரின் மனைவியாக நயணிகா என்பவர் அறியப்படுகிறார், இவர் அங்கியா குலத்தை சேர்ந்தவர் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது - "Amgiya kulavadhanasa"

"amgiya kulavadhanasa" என்று பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது, அங்கி குலம் என்பதன் பொருள் அக்னி குலம் என்பதே

எனவே 2100 ஆண்டுகள் முன்பே அக்னி குலம் பற்றிய குறிப்புகள் கிடைக்கிறது என்பது புலப்படுகிறது, புறநானூறு 201ஆம் பாடலில் வேளிர் யாகத்தில் பிறந்தவர் என்று குறிப்பிடுகிறது, அதாவது அக்னி குலம் என்கிறது

அதன் பிறகு அக்னி குலத்தை பற்றி குறிப்பிடும் மிக பழமையான சாசனம் இதுவே, அதுவும் கல்வெட்டு வடிவில் கிடைத்திருப்பது சிறப்பு

Source - Report On The Elura Cave Temples And The Brahmanical And Jaina Caves In Western India.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???