வன்னிய வரி
வன்னியர் என்பது சாதி என்று நிறுவ நமக்கு ஏராளமான சான்றுகள் உள்ளது
அதில் இதுவும் ஒரு சான்றாக கருதிகொள்ளுங்கள், இதுவும் ஒரு முக்கிய சான்றாகும்
பாண்டியர் காலம் தொடங்கி சங்கம விஜயநகர அரசு காலம் வரை வன்னியர்கள் அரசுக்கு செலுத்தும் வரி என்று "வன்னிய வரி" என்று ஒன்று இருந்துள்ளது, சாதிகள் தங்களின் சாதியின் பெயரில் வரி செலுத்தும் முறை என்பது இருந்துள்ளது, இதற்கு மற்றொரு சான்றாக அமைவது "இடைவரி"(A.R.E 579 of 1902) ஆகும், அதாவது இடையர் குலத்தவர் செலுத்திய வரி ஆகும்
இடைவரி போலவே "வன்னியவரி" என்பதை பற்றி விஜயநகர மன்னர் வீர புக்கராயர் மற்றும் ஶ்ரீ வீர பிரதாபராயர் கல்வெட்டில் வருகிறது A.R.E 25 of 1913 & A R.E 30 of 1913னில் வருகிறது, இதன் காலம் 15ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் ஆகும்
மேலும் பராக்கிரம பாண்டியர் காலத்திலும் "வன்னியவரி" பற்றி கல்வெட்டில் வருகிறது A.R.E 33 of 1913
இம்மூன்று கல்வெட்டுகளும் வன்னியர்கள் அதிகம் வாழும் ஆடுதுறை வட்டம் பெரம்பலூர் மாவட்டம் பகுதியில் இருப்பதாகும்.
Comments
Post a Comment