மனு வேந்தன் வழி தோன்றிய சோழர்கள்





கி.பி 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவாவடுதுறை ஆதின வித்வான் திரு. சபாபதி நாவலர் ஐயா அவர்கள் "சிதம்பர சபாநாத புராணம்" இயற்றினார்கள். இப் புராணத்தில் வரும் திருநாட்டுபடலப் பாடல் ஒன்று சோழர்களை மனு வேந்தன் வழியே தோன்றியவர்கள் என்று கூறுகிறது :-

"மனுவென்றுரைக்குமொரு வேந்தன் வழியே தோன்றிப் பல சோழர் முனைவென்றரசு வீற்றிருந்து முழுமாநிலமு மனுநீதி நனிநன்றோங்கச் சைவநெறி நன்கு வளர்த்து நடராசவனகன் கருணைக்கடன் மூழ்கற்கமைந்த நாடு சோணாடு" 

மேலும் இப் புராணம் மனு வேந்தன் வழி தோன்றிய "சிங்க வர்மன் (என்ற) இரணிய வர்மனின்" வரலாறு பற்றி கூறுகிறது :-

"அங்கவன் பெயர் சிங்க வன்மன்"

"சிங்கவன்மனம் மனுவாந் தந்தை பொற்கழல் வணங்கி"

"மனுவெனும் வேந்தனானோன்"

"அறிவுடைச் சிங்க வன்மன்"

"வெண்குட்டந் தீர்ப்பானெண்ணி விடைபெற்றுச் சிங்க வன்மன்"

"இரணிய வன்மகேளிவர் பொருட்டுனக்"

"கங்கைநீர் கொண்டபிடேகங்காசிஸ் சீர்த்துங்கமாதவரி"

"மாமனுவினுக்காட்டுமன்னுழி"

"தில்லை வாழந்தணர் செயும் வேள்வியாது"  

"பதஞ்சலி யிரணிய வன்மன் பாய் புலிப் பதஞ்சலி"

தில்லை வாழ் அந்தணர்களான திரிசகஸ்வரர்கள் (மூவாயிரவர்) மட்டுமே சோழர்களை மனு வேந்தன் வழி தோன்றியவர்கள் என்று கூறவில்லை, வெள்ளாளர் குலத்தில் தோன்றிய திருவாவடுதுறை ஆதின வித்வான் திரு. சபாபதி நாவலர் ஐயா அவர்களும் சோழர்களை :-

"மனு வேந்தன் வழி தோன்றியவர்கள்"

என்று கூறியிருக்கிறார் என்பதாகும். ஐந்தாம் மனு வேந்தனின் மகனான "சிங்க வர்மன் (என்ற) இரணிய வர்மனின்" வழி மரபினர் என்போர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருமுடிசூடும் பிச்சாவரம் சோழ மரபினர் ஆவர்.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???