பல்லவர் தோன்றல்



மறை (வேதம்) மொழிந்த மரபில் தோன்றிய கருணாகர தொண்டைமான் அவர்களை சோழர் கால புலவர் பெருமான் ஜெயங்கொண்டார் அவர்கள் தான் இயற்றிய கலிங்கத்துப் பரணியில் (களம் பாடியது, அதிகாரம்-13, பாடல்கள்- 63 & 64) :-

"பல்லவர் தோன்றலைப் பாடிரே"

"தொண்டையர் வேந்தனைப் பாடிரே"

என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, "பல்லவர் குலத்தில் தோன்றியவர்" என்று கருணாகர தொண்டைமான் அவர்களை குறிப்பிட்டுள்ளார் என்பதாகும்.

அறம் என்ற தர்மத்தை மேற்கொண்ட அறந்தாங்கி தொண்டைமான் அரசர்கள் தங்களுடைய செப்பேடுகளில் கலிங்கம் வென்ற கருணாகர தொண்டைமான் அவர்களை "தங்களுடைய முன்னோர்" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் "கம்பன் தமிழுக்கு செம்பொன் அளித்தோர்" என்றும் குறிப்பிட்டுள்ளனர் அறந்தாங்கி தொண்டைமான் அரசர்கள்.

'சிலை எழுபது' என்ற நூலினை பாடிய செந்தமிழ்க் கம்பன் அவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளித்தார் கருணாகர தொண்டைமான் என்று சிலை எழுபது பாடல்-68 கூறுகிறது. மேலும் சிலை எழுபது (பாயிரம்-2) பாடல் ஒன்றில் கவிசக்கரவர்த்தி கம்பர் அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்கள் :-

"செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழுபதுவாம் இந்நூல்"

இந்த 'சிலை எழுபது' என்ற நூலினை எழுதியதற்காக புலவர் பெருமான் கம்பர் அவர்கள் ஆயிரம் செம்பொன் பரிசு பெற்ற காரணத்தினால் இந்த நூல் "செம்பொற் சிலை எழுபது" என்று அவரால் குறிக்கப்பட்டது என்று தெரியவருகிறது. இதன் காரணத்தினால் தான் அறந்தாங்கி தொண்டைமான் அரசர்கள் "கம்பன் தமிழுக்கு செம்பொன் அளித்தோர்" என்று தங்களுடைய சாசனத்தில் குறிப்பிட்டுள்ளனர் என்பதாகும்.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???