யாதவர் அனைவரும் மேய்ப்பர் குலத்தவரா? - 1
யயாதிக்கு பிறகு யதுவும் அவர் வழித்தோன்றல்களும் என்ன ஆயினர்?
யயாதி என்னும் சந்திர குல மன்னனின் சாபத்தால் யதுவும் அவர் வழித்தோன்றல்களும் நிரைமேய்க்கும் தொழில் மேற்கொண்டதாகவும் அந்த யாதவரே இன்றைய ஆயர் என்றும் கூறப்படுகிறது.இது உண்மையா என்று ஆராய்வோம்..
1)ஆனால் பாகவத புராணம் மிகத் தெளிவாக சொல்வது யாதெனில் யதுவுக்கு யயாதியின் அரசின் தென் பகுதி கொடுக்கப்பட்டதாக!
--------
(ŚB 9.19.22)
दिशि दक्षिणपूर्वस्यां द्रुह्युं दक्षिणतो यदुम् ।
प्रतीच्यां तुर्वसुं चक्र उदीच्यामनुमीश्वरम् ॥ २२ ॥
diśi dakṣiṇa-pūrvasyāṁ
druhyuṁ dakṣiṇato yadum
pratīcyāṁ turvasuṁ cakra
udīcyām anum īśvaram
Synonyms:-
diśi — in the direction; dakṣiṇa-pūrvasyām — southeast; druhyum — his son named Druhyu; dakṣiṇataḥ — in the southern side of the world; yadum — Yadu; pratīcyām — in the western side of the world; turvasum — his son known as Turvasu; cakre — he made; udīcyām — in the northern side of the world; anum — his son named Anu; īśvaram — the King.
Translation:-
King Yayāti gave the southeast to his son Druhyu, the south to his son Yadu, the west to his son Turvasu, and the north to his son Anu. In this way he divided the kingdom.
------------
2)மேலும்,புருவை யயாதி தன் அரசின் வேந்தனாக முடிசூடியதாகவும்
மற்ற மகன்களை புருவுக்கு கீழ் ஆளச் செய்ததாகவும் கூறுகிறது
-----------
( ŚB 9.19.23)
भूमण्डलस्य सर्वस्य पूरुमर्हत्तमं विशाम् ।
अभिषिच्याग्रजांस्तस्य वशे स्थाप्य वनं ययौ ॥ २३ ॥
bhū-maṇḍalasya sarvasya
pūrum arhattamaṁ viśām
abhiṣicyāgrajāṁs tasya
vaśe sthāpya vanaṁ yayau
Synonyms
bhū-maṇḍalasya — of the entire planet earth; sarvasya — of all wealth and riches; pūrum — his youngest son, Pūru; arhat-tamam — the most worshipable person, the king; viśām — of the citizens or the subjects of the world; abhiṣicya — crowning on the throne of the emperor; agrajān — all his elder brothers, beginning from Yadu; tasya — of Pūru; vaśe — under the control; sthāpya — establishing; vanam — in the forest; yayau — he went away.
Translation:-
Yayāti enthroned his youngest son, Pūru, as the emperor of the entire world and the proprietor of all its riches, and he placed all the other sons, who were older than Pūru, under Pūru’s control
----------
3) மேலும்,நந்த கோபரை வசுதேவரின் சகோதரராகவும் பாகவதம் கூறுகிறது.👇
--------
ŚB 10.5.20
वसुदेव उपश्रुत्य भ्रातरं नन्दमागतम् ।
ज्ञात्वा दत्तकरं राज्ञे ययौ तदवमोचनम् ॥ २० ॥
vasudeva upaśrutya
bhrātaraṁ nandam āgatam
jñātvā datta-karaṁ rājñe
yayau tad-avamocanam
Synonyms
vasudevaḥ — Vasudeva; upaśrutya — when he heard; bhrātaram — that his dear friend and brother; nandam — Nanda Mahārāja; āgatam — had come to Mathurā; jñātvā — when he learned; datta-karam — and had already paid the taxes; rājñe — unto the King; yayau — he went; tat-avamocanam — to the residential quarters of Nanda Mahārāja.
Translation
When Vasudeva heard that Nanda Mahārāja, his very dear friend and brother, had come to Mathurā and already paid the taxes to Kaṁsa, he went to Nanda Mahārāja’s residence.
------------
நமக்கு தற்போது இயல்பாகவே ஒரு ஐயம் எழும்.யதுவுக்கு வேந்தனாக முடிசூடும் உரிமை தான் மறுக்கப்பட்டது.எனினும், அரசில் தென் பகுதி தரப்பட்டு புருவின் கீழ் ஆள வழிவகை யயாதியால் செய்யப்பட்டுள்ளது.எனில் யாதவர்(யது வின் வழி தோன்றியோர்) எதற்காக நிரை மேய்ப்பு செய்ய வேண்டும்?அரச குலத்தைச் சேர்ந்த வசுதேவரையும் நிரை காப்பாளரான நந்தகோபரும் எவ்வாறு சகோதரர் ஆவர்....ஏன் பாகவதம் அவர்களை அவ்வாறு கூறுகிறது.
இதற்கு விடை மாதவச்சாரியரின் குறிப்புகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது(படம் காண்க)
அதாவது வசுதேவரின் தந்தை சூரசேனர் ஒரு வைசிய பெண்ணை மணந்ததாகவும் அவர்களுக்கு பிறந்தவர் நந்தகோபர் என்றும் அக்குறிப்பு கூறுகிறதாம்.இதனால் தான் வசுதேவர் அரசகுலமாக அறியப்பட நந்தகோபர் நிரை காப்பை செய்தார் என்றும் அறிகிறோம்.இந்த குறிப்பு கிடைத்து விட்டால் ஒரு பெரிய ஐயம் தீரும்.
Comments
Post a Comment