சிலையெழுபது நூல் போலியானதா?
கம்பர் இயற்றிய சிலையெழுபது நூலை சிலர் பொச்செரிச்சல் கொண்டு பிற்கால நூல் என்று கூறுவதுண்டு, இது மிக பெரிய பொய் என்பதை சான்றுகள் கொண்டு நிறுவுவோம்
கம்பர் காலம் என்ன என்பதும் இந்த நூலின் வாயிலாக தெரியவருகிறது
இந்த நூல் பல்லவ குல தோன்றலான கருணாகர தொண்டைமான் அவர்களின் சாதியான வன்னியர் சாதியின் புகழை பற்றி குறிப்பிடும் நூல் ஆகும்
இந்த நூல் பற்றிய குறிப்புகள் பிற்கால வன்னியர் குல செப்பேடுகளிலும், அறந்தாங்கி தொண்டைமான்களின் செப்பேடுகளிலும் காணலாம், இதற்கு ஒரு வழி நூல் எல்லாம் கூட உண்டு
கருணாகர தொண்டைமான்னின் காலம் 11-12ஆம் நூற்றாண்டு ஆகும், இவர் குலோத்துங்க சோழர் மற்றும் அவரின் மகன் விக்ரம் சோழரின் படை தலைவனாக இருந்தவன், இதனை சோழர் வரலாறு நூல்களில் இருந்து அறியலாம், மேலும் சோழர் உலா நூல்களிலும் இதனை அறியலாம்
சிலையெழுபது நூலின் நம்பகத்தன்மை அதில் வரும் இரண்டு பாடல்களின் மூலம் அறியலாம், அந்த நூலில் கருணாகரனின் சமகால மன்னர்களான குலோத்துங்கன் மற்றும் விக்ரம சோழன் பற்றிய குறிப்புகள் வருவதோடு அவர்களை வன்னியர் என்றும் குறிப்பிடுகிறது -
"கலையாய் வன்னி குலோத்துங்கர் கரத்திற் கவின்கொண் டமைந்தவென்றிச், சிலையா லன்"
"நெட்டையிடுமக் கினி குலத்தரச விக்ரமரெ டுத்த சிலையே"
மேலும் விக்ரம சோழர் மற்றும் குலோத்துங்க சோழன் காலத்தில் மலையமான்கள் சிற்றரசு மரபினர்களாக வலுவான ஒரு இடத்தில் இருந்தனர் இவர்கள் பல இடங்களில் தங்களை வன்னியர் என்றும் பள்ளி என்றும் பதிவு செய்தவர்கள், அவர்களை பற்றிய குறிப்பும் இந்நூலில் காணலாம், இவர்களை புலவர் கம்பர் வன்னியர் என்றே குறிப்பிடுகிறார் -
"மலையன்னர் குன்றவர்பல் லவர்மும்முப் படையுடையார் வனியர்பிற ரென்னுடையார் பகரீரே"
இந்த அடிப்படை சான்றுகளின் வாயிலாக இந்நூலின் authentication என்ன என்பதை தெளிவாகவே உணரலாம், சான்றுகள் தான் வரலாறு கற்பனை கதைகள் அல்ல!!!
Comments
Post a Comment