வன்னிய வரி - 2
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் (கண்டராதித்தபுரம்) அருகே உள்ள ஓடுவாங்குப்பத்தில் உள்ள முதலாம் வேங்கடதேவ மகாராயர் காலத்திய (கி.பி. 1588) கல்வெட்டு ஒன்று :-
"வாணாதராய முதலியார் பண்டாரத்தார் அவர்களுக்கு ஸிலாஸாநம் பண்ணி குடுத்தப்படி கண்டராதித்தபுரம் காரணம் தாங்கல் வில்லவதரையர் குப்பம் ஓடுவன் குப்பம் செல்லன் குப்பம் அமிஞ்சிலேந்தல் ஆக க்ராமம் ஆறும் ததம் பண்டாரத்தார் அவர்களுக்கு விட்ட மாஸத்துக்கும் அரசு மானியங்களுக்கும் வன்னிய வரிக்கும் வெச்ச"
என்று குறிப்பிடுகிறது. வேட்டவலம் அரசர் வாணாதராய முதலியார் பண்டாரத்தார் அவர்களுக்கு கண்டரதித்தபுரம், காரணம் தாங்கல், வில்லவதரையர் குப்பம், ஓடுவன் குப்பம், செல்லன் குப்பம், அமிஞ்சியேந்தல் உள்ளிட்ட ஆறு கிராமங்கள் மாசத்திற்காக எழுதிக்கொடுக்கப்பட்டது. மேலும் வேட்டவலம் அரசர் பெரும் அரசு மானியம், வன்னிய வரி பற்றியும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
மேற்சொன்ன விஜயநகர கால கல்வெட்டு குறிப்பிடும் "வன்னிய வரி" என்பது வன்னிய மக்கள் செலுத்தும் வரியாகும்.
"வன்னிய வரி" பற்றி விஜயநகர கால விரிஞ்சிபுரம் கல்வெட்டும் குறிப்பிடுகிறது என்பதாகும்.
Comments
Post a Comment