தூய சந்திர குலத்து வன்னியர்
பெரியபுராணம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது -
"வெம்மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதி யார்போற்"
இதில் மற குல வேட்டுவர் சாதி என்று குறிக்கிறது, ரெண்டுமே ஒரே சாதியை குறிக்கும் சொற்கள் தான்
அடுத்ததா "ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார்" என்ற வரி வருகிறது, ஈழவர் என்பதும் சான்றார் என்பதும் ஒரே சாதியை குறிக்கும் சொற்கள் தான், அதாவது நாடார்களை குறிக்கும் சொற்கள், இது பெரியபுராணத்தில் ஏனாதிநாதரை குறித்து வருகிறது
அடுத்ததா "தூயச்சந்த் வங்கிசம்சேர் வன்னியரில்" இது பணவிடு தூது நூலில் வரும் வாசகம், இதன் பொருள் சந்திர குலத்து வன்னியர் என்பதே
படம் - சந்திர குலத்து சம்புவராயரின் சின்னம், சம்புவராயர் சின்னம் இருக்கும் இடத்தில் சூரியன் - சந்திரன் உள்ளது என்று சிலர் உருட்டுவார்கள், ஆனால் இந்த படத்தில் மிக தெளிவாக சந்திரன் மட்டும் தனியாக உள்ளது, இதன் காரணம் பல்லவ குல சம்புவராயர்கள் சந்திர குலம் என்பதாலே.
Comments
Post a Comment