வன்னியர்களின் மெய்க்கீர்த்தி கல்வெட்டு

"வம்பணாரும் புண்டரிக மலர் மடந்தை பாலடி நாளுஞ் சம்பு மாமுனி மாபலி வந்தோர்" வன்னியன் என்னும் பெயர் அச்சாதியினர் அக்னியில் பிறந்ததால் ஏற்பட்ட பெயராகும், இதனை வெள்ளைக்காரன் காலத்தில் இருந்த பெயர் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு, அவர்கள் அனைவரும் இந்த சான்றுகளை காண நேரிட்டால் அவர்கள் இந்த கருத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புவோம், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வன்னியர்கள் பற்றிய கல்வெட்டு ஒன்று தொல்லியல் துறை வெளியிட்ட அரியலூர் மாவட்ட கல்வெட்டுகள் வாயிலாக அறிய நேரிட்டது, அதில் அவர்கள் தங்களை "சம்பு மாமுனி மாபலி வந்தோர்" என்று குறிப்பிடப்படுகிறார்கள், இதன் மூலம் வன்னியர்கள் அக்னியில் பிறந்த கதை என்பது சோழர் கால சாசனத்திலே இடம்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது, இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும், இது அப்புராணத்தின் தொன்மம் யாது என்பதை நமக்கு நன்கு உணர்த்துகிறது "வஞ்சி கூடலுறை காஞ்சி வளவர்(சோழன்) கோமானருளினாலே தஞ்சையுள்ளுங் காப்பதற்குச் சக்கரவாளம் பெற்றுடையோர்" மேலும் பிற்கால சோழன் தஞ்சையை முத்தரையர் மன்னர்களிடம் இருந்து வென்ற அதனை கைபற்றி ஆட்சி செய்தனர், கி...