புதுக்கோட்டை குடுமியான்மலை பேரரையர்களான பள்ளிகள்

புதுக்கோட்டை மாவட்டம், திருமய்யம் வட்டம், சேரனூரில் இருக்கும் திருபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவரின் கல்வெட்டு ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-  



"திருநலக்குன்றத்துப் பள்ளிகளில் செல்வன் வில்லியான கைக்கொள பெரயனுக்கு தண்டெசுரவிலைப்பிரமாணம் பண்ணிக்குடுத்த பரிசாவது" (Inscriptions of the Pudukottai State No. 500)

மேலும் மூன்றாம் இராஜராஜன் காலத்து கல்வெட்டு ஒன்று இதே திருநலகுன்றத்து கல்வெட்டு ஒன்று மற்றொரு பள்ளி இனத்தை சேர்ந்தவரை பற்றி குறிப்பிடுகிறது :-

"திருநலக்குன்றத்து பள்ளிகளில் பெரியான் சிறுமன்"

மேற்குறிப்பிட்ட கல்வெட்டுகள் "திருநலக்குன்றத்துப் பள்ளிகளில்" என்று குறிப்பிடுகிறது. அதாவது "திருநலக்குன்றத்து வன்னியர்களில்" என்று குறிப்பிடுகிறது. திருநலக்குன்றம் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் "குடுமியான்மலை" என்பதாகும். குடுமியான்மலை என்பது சங்ககாலம் முதல் இருந்துவரும் புகழ்ப்பெற்ற பகுதியாகும்.       

எனவே, பாண்டியர் காலத்தில் குடுமியான்மலையில் பள்ளிகளான வன்னியர்கள் இருந்திருக்கின்றனர் என்று மிகத் தெளிவாக தெரியவருகிறது. இவர்கள் "வில்லிகளாக", அதாவது "விற்படை வீரர்களாகவும்" (Bowmen Regiment) "பெரையன்களாகவும்"(பேரரையன்) இருந்திருக்கின்றனர் என்பதை கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. இந்த விற்படை வீரர்கள் "கைக்கோள பேரரையர்கள்" என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். 

இந்த கல்வெட்டின் மூலமாக தெரியவரும் கருத்து என்னவென்றால், சோழர் & பாண்டியர் பெருவேந்தர்களின் படையில் வன்னியர்கள் "விற்படை வீரர்களாகவும்" "பேரரையர்களாகவும்" இருந்திருக்கின்றனர் என்பதாகும்.

Thanks to Santhosh Padayatchi & Murali Nayakar.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???