பிடவூர் வேளிர் கச்சிராஜர்

முதலாம் குலோத்துங்கச் சோழனின் உடையாளூர் கல்வெட்டு ஒன்று மிகத் தெளிவாக "வெளீர்" (வேளிர்) என்று சொல்கிறது.  ஆனால் இந்த  கல்வெட்டை பதிப்பித்தவர்கள் "வேளிர்" என்ற வார்த்தையை பதியாமல் தவிர்த்துவிட்டனர்.  இது நிச்சயமாக தர்மமாகாது என்பதாகும். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் தேடும்பொழுது இந்த கல்வெட்டின் மைப்படியை  யாரோ பதிவேற்றியிருந்ததை காணநேர்ந்தது. இந்த கல்வெட்டை பார்த்தபொழு மிகுந்த அர்ச்சரியம் எனக்கு. ஏனென்றால் இந்த கல்வெட்டின் மைப்படியில் "வெளீர்" (வேளிர்) என்று மிகத் தெளிவாக இருக்கிறது.  இந்த கல்வெட்டை பதிப்பித்தவர் ஒன்றும் சாதாரண ஆய்வாளர் கிடையாது.  தத்தக்கா புத்தக்கா என்று கல்வெட்டு பார்க்கும் என்னாலேயே இதை படிக்கமுடிகிறது என்றால், இந்த கல்வெட்டை பதிப்பித்த அறிஞர் ஏன் இந்த "வேளிர்" என்ற வார்த்தையை தவிர்த்து படித்தார்கள் ?  அதற்கான காரணம் என்ன ?  ஏனென்றால் வன்னியர்களான கச்சிராஜர்களை கல்வெட்டு "வேளிர்" என்று சொல்வதால் இதை தவிர்த்து படித்தார்கள் என்பதாகும்.  

இந்த கல்வெட்டு மிக முக்கியமானதாகும்.  இந்த கல்வெட்டு தான் "வேளிர்" என்று தெளிவாக சொல்லும் பழமையான சான்றாகும்.  இந்த கல்வெட்டு சான்று மற்றொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.  இந்த சான்றானது  நச்சினார்க்கினியர் சொன்னதாக சொல்லப்படும் "பிடவூர் வேளிர்" பற்றிய விளக்க உரையை பொய்த்துப்போக செய்கிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் "வேளிர்" என்ற வார்த்தையை பதிப்பிக்காமல் விட்டுவிட்டனர் போலும்.  கல்வெட்டின் மைப்படியில் "வேளிர்" என்று வரும் வரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது :-


"பிடவூர் வெளான் வெளிர் அரிகேசவனாந கச்சிராஜற்காக"    

இந்த மைப்படியை பார்க்காமல் போயிருந்தால் கச்சிராயர்கள் "வேளிர்" என்று தெரியாமல் போயிருக்கும்.  பிடவூர், விளந்தை போன்ற பகுதிகள் சோழர் காலத்தில் இருங்கோளப்பாடியில் இருந்ததாகும். புறம் 201 வது பாடலில் வரும் வேளிர் இருங்கோவேள் அரசாட்சி செய்த பகுதி இந்த பிடவூர் ஆகும்.  இந்த பிடவூர் இன்று புடவூர் என்ற பெயருடன் விழுப்புரம் கும்பகோணம் சாலையில் வரும் சோழதரம்-ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ளது.  இதெல்லாம் இருங்கோளப்பாடியில் இடம்பெற்றிருந்த ஊர்களாகும்.  இப்பகுதிகளை  விளந்தை கச்சியராயர்கள் அரசாட்சி செய்துள்ளனர்.  

"காஷ்மீர தேசத்து துவராபதி தலைவர்கள்" என்று விளந்தை கச்சியராயர்களை ஸ்ரீமுஷ்ணம் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.  இன்றும் விளந்தையில் கச்சியராயர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  "விளந்தை வேள்" என்று இலக்கியங்களில் வருகிறது.   

ஒரு வார்த்தையை.  அதுவும் மிகத் தெளிவாக வரும் வார்த்தையை, வரலாற்று தொன்மையை நிறுவும் "வேளிர்" என்ற வார்த்தையை, வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு படிப்பது என்பது எந்த வகையில் தர்மமாகும் என்பதை கல்வெட்டு படிப்பதில் பிரம்மாவான திரு. ராஜகோபால் ஐயா அவர்கள் சொன்னால் சிறப்பாக இருக்கும்.

Article By - Shri Murali Nayakar 

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???