வன்னியர்களின் மெய்க்கீர்த்தி கல்வெட்டு

 

"வம்பணாரும் புண்டரிக மலர் மடந்தை பாலடி நாளுஞ் சம்பு மாமுனி மாபலி வந்தோர்"

வன்னியன் என்னும் பெயர் அச்சாதியினர் அக்னியில் பிறந்ததால் ஏற்பட்ட பெயராகும், இதனை வெள்ளைக்காரன் காலத்தில் இருந்த பெயர் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு, அவர்கள் அனைவரும் இந்த சான்றுகளை காண நேரிட்டால் அவர்கள் இந்த கருத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புவோம், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வன்னியர்கள் பற்றிய கல்வெட்டு ஒன்று தொல்லியல் துறை வெளியிட்ட அரியலூர் மாவட்ட கல்வெட்டுகள் வாயிலாக அறிய நேரிட்டது, அதில் அவர்கள் தங்களை "சம்பு மாமுனி மாபலி வந்தோர்" என்று குறிப்பிடப்படுகிறார்கள், இதன் மூலம் வன்னியர்கள் அக்னியில் பிறந்த கதை என்பது சோழர் கால சாசனத்திலே இடம்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது, இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும், இது அப்புராணத்தின் தொன்மம் யாது என்பதை நமக்கு நன்கு உணர்த்துகிறது

"வஞ்சி கூடலுறை காஞ்சி வளவர்(சோழன்) கோமானருளினாலே தஞ்சையுள்ளுங் காப்பதற்குச் சக்கரவாளம் பெற்றுடையோர்"

மேலும் பிற்கால சோழன் தஞ்சையை முத்தரையர் மன்னர்களிடம் இருந்து வென்ற அதனை கைபற்றி ஆட்சி செய்தனர், கிட்டத்தட்ட முதலாம் இராஜேந்திரன் காலம் வரை அது சோழர்களின் தலைநகராக விளங்கியது, அதன் பிறகும் சோழர்களின் முக்கிய நகரங்களில் ஒன்றாக தஞ்சை விளங்கியது. இது மட்டுமின்றி பூம்புகார், பழையாறை போன்ற சோழர்களின் பல தலைநகரங்கள் ஒருங்கிணைந்த பழைய தஞ்சை மாவட்டத்தையே சேர்ந்தது

எனவே தஞ்சை எந்தளவு சோழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறியலாம்

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தஞ்சை மாநகரை மூன்றாம் குலோத்துங்க சோழனின் உத்தரவின்படி சக்கரவாளம் கொண்டு காவல் புரிபவர்கள் என்று வன்னியர்களை இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது, சக்கரவாளம் என்பது மலைத்தொடரை குறிக்கும் சொல் என்று தெரியவருகிறது எனவே மலைத்தொடர் போல் பெரும்படையை கொண்டு வன்னியர்கள் தஞ்சையை காவல் புரிந்தனர் என்று கொள்ளலாம், இந்த ஒரு கல்வெட்டின் மூலம் வன்னியர்களின் நிலை சோழர்கள் காலத்தில் என்ன என்பதையும் அவர்கள் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக வளவனுக்கு இருந்துள்ளனர் என்பதும் விளங்கும், சோழர்கள் காலத்தில் வன்னியர்கள் போர்குடியினராக தஞ்சையை காவல் புரிந்துள்ளனர் என்பது இராஜகுல சாசனம் ஆகும்


"ஆரியோர்,அந்தணர் தம் ஆகுதியில் அறங்காவல் பெற்றுடையோர்"

ஆரியர், அந்தணர் வளர்க்கும் யாகதீயினை காப்பவர்கள் வன்னியர்கள் என்றும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது, இத்தகைய மாண்பானது சத்ரியர்களுக்கு உரித்தானதாகும், 

விஸ்வாமித்திரர் யாகம் செய்தபோது அரக்கர்களின் அட்டூழியத்தை அழிக்கவும், தான் வளர்க்கும் யாகத்தை பாதுகாக்கவும் சத்ரிய குலத்தவர்களான இராமனையும் லக்ஷ்மணனையும் அணுகியுள்ளார், இதன் மூலம் இது சத்திரியர்களின் பணி என்பது தெரியவருகிறது


"திருச்சிற்றம்பலமுடையார் ஸ்ரீ மேற்கு சுவர் பாதங்களை நோக்கி பன்னெடுங்காலம் பணி கொண்டு அறுநவதிக்கு எழுபத்தொன்பது னுட்டுப் பன்னாட்டோம்(பன்னாட்டார்)"

திருச்சிற்றம்பலம் உடையாரான தில்லை நடராசரை நோக்கி பன்னெடுங்காலமாக பணி செய்து வருபவர்கள் என்றும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது 

"உடையார் அறவை கணபதீஸ்வரமுடைய வாதாவி நாயகர்க்கும் இக்கோயில் வாதாவி விநாயகப் பிள்ளையார்க்கும் பூசைக்கும் திருப்பணிக்கும் திருவிளக்குக்கும் நாங்கள் குடுத்த நிச்சயித்தபடி .......... வந்த காசு ரு7ப பொங்சு காசு.... றவூரார் பத்துக் காசும் இப்படை வீட்டிலே பிடி பிடி நெல்பிடிச்சு சாரு சந்து அமுது செல்லவும் இப்படியால் வந்தவை தண்டு மிடத்து வெண்கலம் எ.."

மேலும் 9 திசை 79 நாட்டு பன்னாட்டார்கள் ஒன்று கூடி இவ்வூரிலிருந்த கணபதிஸ்வரமுடையார் கோயில் வாதாவி நாயகர் மற்றும் வாதாவி விநாயக பெருமான் பூசை,திருப்பணி,திருவிளக்கு ஆகியவற்றுக்காக ஆகும் செலவுக்கு காசு முதலீடாக கொடுத்ததை குறிப்பிடுகிறது





இந்த கல்வெட்டானது வன்னியர்களின் சிறப்பை கூறும் மிக முக்கிய சோழர் கால சாசனம் ஆகும்.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???