சோழர் குலத்தவர்களான வன்னியர்கள்
முன்னுரை - இன்று பல சாதிகள் தங்களை சோழர் வழியினர் என்று பட்டங்களை எல்லாம் சான்றாக வைத்து பேசி வருகின்றனர், இது மிகவும் வேடிக்கையானதாகும், சோழர்களை உரிமை கோர சான்றுகள் தேவை, அவை பள்ளி குலத்தவர்களுக்கு மட்டுமே உள்ளது
சான்றுகளின் தொகுப்பான இந்த blog ஆரம்பத்தில் பலர் பார்க்காவிட்டாலும், வரலாற்றை தேடி வருபவர்கள் இதை காண வாய்ப்பு நேரிடும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு
ரவிகுலத்து செம்பியரான வன்னியர் - சரி விஷயத்துக்கு வருவோம், வன்னியர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திராவிலும் பெருமளவு உண்டு, ஆந்திரா பகுதிகளான நெல்லூர், சித்தூர் போன்றவை சோழ தமிழ் வேந்தன் கரிகாலன் வழி வந்த பொத்தப்பி சோழர் ஆட்சி செய்த பகுதிகள் ஆகும், இத்தகைய பகுதிகளில் இன்றும் வாழும் பள்ளிகள் தங்களை ரவி குலம் என்றும் இராமன் வழி என்றும் கூறி கொள்கிறார்கள், இதற்கு பல சான்றுகளும் உண்டு
நெல்லூர் மாவட்ட கிராம திருவிழாக்கள் என்ற புத்தக குறிப்பில் - பள்ளிவாலு(அக்னி குல சதிரியர்) ஜாதி சூரிய வம்சம் ரவி குல கோத்திரம் என்று குறிப்பிடுகிறார்கள் :
மேலும் இது மட்டுமின்றி edgar thurston எழுதிய castes & tribes of southern india புத்தகத்திலும் இதனை பதிவு செய்துள்ளார், அதாவது ஆந்திரா பள்ளிகள் அனைவரும் தங்களை ரவி கோத்திரம் என்று குறிப்பிடுகிறார்கள் என்று பதிவு செய்துள்ளார் -
இத்தகைய ரவி குலம் என்பது சோழர்கள் தங்களின் ஆவணங்களில் தங்களின் குலமாக குறிப்பிட்டுள்ளனர் -
ஆந்திரா வன்னியர் மட்டுமின்றி தமிழகத்திலும் வன்னியர்கள் தங்களை சோழர் குலம் என்றும் செம்பியன் என்றும் தஞ்சாவூர் கேசட்டர் போன்றவற்றில் பதிவு செய்துள்ளனர், செம்பியன் என்பது சோழனின் குடிபெயர் ஆகும்
இது மட்டுமின்றி வன்னியர்கள் தங்களை சோம சூரிய அக்னி குலம் என்றும் செப்பேடுகளில் பதிவு செய்துள்ளனர், வில்லியனூர் செப்பேடு இதனை குறிப்பிடுகிறது -
பிச்சாவரம் பாளையக்காரர்களும், இரண்யவர்ம சோழனும் - இவையெல்லாம் தவிர்த்து நேரடி சோழ ராசா மரபினர் என்பது பிச்சாவரம் பாளையக்காரர் வம்சத்தவரே ஆகும், பிச்சாவரம் பாளையக்காரர்கள் தில்லையில் சோழர்களாக திருமுடி சூடுபவர்கள், இவர்கள் தங்கள் முன்னோர் என்று இரண்எவர்ம இராஜவை குறிப்பிடுகிறார்கள்
இதை caste & tribes of southern india volume - 6யில் பதிவு செய்துள்ளார்கள் -
இத்தகைய இரண்யவர்மன் பற்றிய கதையை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும் அப்போது தான் இந்த பதிவு இன்னும் விரிவாக புரியும்
முற்காலத்தில் எங்கும் காடாக இருந்த போது கவுட தேசத்து அரசகுமாரன் சிங்க வர்மன் என்பவன் தவம் செய்ய தென்னாட்டுக்கு வந்தான். ஶ்ரீசைலம், காலகஸ்தி ஆகிய தலங்களை தரிசித்து பூசை செய்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் அவர்களை தரிசித்து பூசை செய்தான். பின்னர் தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்த சிதம்பரம் வந்து வியாக்ரபாதரையும், பதஞ்சலி முனிவரையும் தரிசித்தான். சிவகங்கை குளத்தில் மூழ்கி நடராஜப் பெருமான் அருளால் தொழுநோய் நீங்கிப் பொன்னிறம் அடைந்து இரணிய வர்மன் என்று பெயர் பெற்றான் என்று சிதம்பரம் கோயில் புராணம் குறிப்பிடுகிறது
வியாக்ரம் என்றால் புலி. வியாக்ரபாதர் என்றால் புலிகால் முனிவர். பதஞ்சலி என்றால் ஆதிஷேசன் (பாம்பு = கேது). முதலாம் ராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேட்டின் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று :-
"அந்த குலத்தில் (சோழ) வியாக்ரகேது என்னும் சித்ரரதன் பிறந்தான். அந்த அரசன் புலிபொறிக்கப்பட்ட கொடியை உடையவன். புகழ்ப்பெற்ற வீரத்தின் குவியல். ஆத்திப் பூக்களால் அணி செய்யப்பட்ட மகுடத்தை உடையவன்"
என்று குறிப்பிடுகிறது. வியாக்ரபாதர் - பதஞ்சலி (வியாக்ர - கேது) ஆகியோரிடம் சோழ வம்சத்தோர் புலிக்கொடி பெற்ற மரபினர் என்பதால் இந்த சோழ அரசன் சித்ரரதன் அவர்கள் "வியாக்ரகேது" என்ற பெயரினைப் பெற்றார்.
இரண்யவர்மன் புலி கொடி பெற்றவன், சூரிய குலத்தை சேர்ந்தவன், மனுவின் புதல்வன், ஆத்தி மாலை அணிந்தவன் என்றெல்லாம் கோயிற் புராணம் கூறுகிறது -
மேலும் சோழ அரசன் தொழு நோய் தீர மந்தரமலை அருகில் உள்ள குளத்தில் குளித்து நோய் தீர்ந்த கதை deoghar கோயில் கல்வெட்டிலும் காண கிடைக்கிறது -
இந்த பிச்சாவரம் இரன்யவர்மன் தொடர்பு மற்றும் இந்த பிச்சாவரம் பாளையக்காரர்கள் தில்லையில் முடிசூட்டும் உரிமை பெற்றவர் என்பதும் அரியலூர் மழவராயர் அவையில் இயற்றப்பட்ட திருக்கைவளம் நூலிலும் வருகிறது -
சோழர் தில்லையில் முடிசூடியது பற்றி கல்வெட்டுகளிலும் காணக்கிடைக்கிறது -
முடிவுரை - இத்தகைய சான்றுகள் வாயிலாக வன்னியர்களே சோழர்கள் என்பதும், பிச்சாவரம் பாளையக்காரர்கள் அச்சோழர் வழியினர் என்பதும் விளங்கும்.
Comments
Post a Comment