சின்ன சேலம் காங்கேய உடையார்



சின்ன சேலம் பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் காங்கேய உடையார்கள், இவர்கள் வன்னியர் குலத்தை சேர்ந்தவர்கள். இன்றளவும் காங்கேய மன்னர் வம்சத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள், இவர்களை பற்றிய செய்திகள் 1500களிலே செப்பேடுகளில் கிடைக்கிறது. வன்னியர் பாளையக்காரர் வரிசையில் இவர்கள் பெயரும் வருகிறது -


வன்னியர்(நடன காசிநாதன்) பக்கம் 236

கங்கர்கள் தங்களை காங்கேய வம்சம் என்று குறிப்பிடுவதால் இந்த காங்கேய உடையார்கள் கங்க வம்சமாக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு, இவர்களை பற்றிய சிவன் கோவில் மற்றும் அங்காளம்மன் கோவில் அருகே உள்ள கிருஷ்ணதேவராயர் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது, இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் -



"அய்யன் காங்கையற்" என்று மன்னரை கல்வெட்டு குறிப்பிடுகிறது, சிவன் மற்றும் பெருமாள் கோவிலுக்கு தானம் செய்தது பற்றி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊர் ராயப்பநல்லூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மன்னர் காலத்தில் பயன்படுத்திய வாள், குறுவாள், ஈட்டி, மான்கொம்பு போன்ற போர்க்கருவிகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர் -








கல்லாநத்தம் என்ற ஊரில் இவர்கள் கோட்டை இருந்ததாகவும், அது தற்போது அழிந்துவிட்டதாகவும் நினைவு கொள்கிறார்கள், 70 ஆண்டுகள் முன்வரை இவர்களின் முன்னோர் 18 கிராமங்களில் தானியங்களை வரியாக பெற்றுள்ளனர் என்பதையும் நினைவு கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???