ஒளியர்களான அக்னி குலத்து வேளிர்கள்

 

தொல்லியல் அறிஞர் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள், தான் எழுதிய புத்தகமான நடுகற்களில் வேளிர்களைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்கள் :-   

"சங்கப் பாக்களில் வரும் வேளிர் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் போருடன் தொடர்பானவை, ஐம்பெரும் வேளிர் மற்றும் பதினொரு வேளிர் (அகம் 36, 135) போர்களில் ஈடுப்பட்டனர்.  மூவேந்தரும் ஒன்று கூடி, பாரி என்ற வேளிருடன் போரிட்டுள்ளனர்.  வேளிர் தம்மை அக்கினிக் குலம் என்று கூறிக் கொண்டனர். 'வடபால் முனிவன் தடவினுள் தோன்றி' என்று கபிலர் குறிப்பிடுகிறார்.  அரிக்கமேடு, கொடுமணல் பானை ஓடுகளில் வேள் என்ற சொற்கள் உள்ளன.  வேள் என்ற சொல் வேளு என்று படிக்கப்பட்டது.  வேள் என்ற சொல் வேள்வி என்ற சொல்லுடன் தொடர்புடையது என்பர், வேள் என்ற சொல்லுக்குத் தலைமை, விருப்பம், பிரகாசி என்ற பொருட்களே சிறப்பாகும்.  ஒளியர், வேளிர் எனலாம்.  வேணாடு என்றால் ஒளிநாடு என்று பொருளாகும். வேள், அரசர் ஒரே பொருளைத் தருவதால் பல நடுகற்களில் அரசர் என்ற சொல் இடம் பெறுகிறது".

வரலாற்று அறிஞர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள், கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்துவரும் க்ஷத்ரியர்களான திகுலர்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றில், அவர்களை சங்க காலத்தில் குறிப்பிடப்படும் "ஒளியர்" என்பவர்களாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???