மதிக் குல ராமன்
தமிழகத்திலிருந்து வன்னிய ஆட்சியாளர்களைக் குளக்கோட்டன் திருகோணமலைக்கு அழைத்து வந்த செய்தியைக் கோணேசர் கல்வெட்டின் பின்வரும் பாடல் உணர்த்துகின்றது :-
''தானம் வரிப்பத்தென்னும் அரன் தொழம்பார்குள் இகலார் தர்க்கம் வந்தால்
மானபங்கமடையாமல் நடுத்தீர்ப்பதார் எனவே மதுரை சென்று
ஆனமதிக் குலராமன் தனியுண்ணாப் பூபாலன் தனைக் கொணர்ந்து
தேன்மர்பூந் தொடைமார்பன் திருகோணை நகரரசு செய்ய வைத்தான்''
கோணேசர் கல்வெட்டில் உள்ள பாடல் குளக்கோட்டன் மதுரைக்கு சென்று தனியுண்ணா பூபால வன்னியனை அழைத்து வந்து திரிகோணமலை நகரத்தை ஆட்சி செய்ய வைத்தான் எனக் கூறுகின்றது. மேற்படி பாடலின் மூலம் குளக்கோட்டன் தமிழ் நாட்டில் இருந்து ஆட்சியாளர்களை அழைத்து வந்து திருகோணமலையை ஆட்சி செய்ய ஏற்பாடு செய்தான்.
குளக்கோட்டன் அவர்கள் மதுரையில் இருந்து அழைத்து வந்த தனியுண்ணா பூபால வன்னியன் அவர்கள் ''மதி குல ராமன்'' (சந்திர வம்சத்து ராமன்) ஆவர்.
குளக்கோட்டன் அவர்களை சான்று ''குளக்கோட்டனென்னும் சோழ கங்கன்'' என்று குறிப்பிடுகிறது. இவர் கலிங்க நாட்டவர் என்று தெரியவருகியது. இவர் காளிகாட்டம் (கல்கத்தா) பகுதியில் இருந்து முக்குவர்களை அழைத்து வந்தார் என்றும் சான்று தெரிவிக்கிறது.
கீழை கங்கர்கள் தங்களை ''கலிங்காதிபதி'' என்றும் ''சசி வம்ச பூபதி'' என்றும் ''ஆத்ரேய கோத்திரத்தினர்'' என்றும் ''மஹாபாரத க்ஷத்ரிய வம்சத்தவர்'' என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் சின்னம் ''காளை'' சின்னமாகும். அனந்தவர்ம சோழ கங்கனின் கி.பி.11 ஆம் நூற்றாண்டின் செப்பேடு ஒன்று அவரது வம்சத்து முன்னோராக அத்ரி முனிவர் அவர்களை குறிப்பிட்டுள்ளார்கள். அத்ரி முனிவர் வழிவந்தவர்கள் ஆத்ரேய கோத்திரத்தினர் என்று இதன் மூலம் உறுதியாக தெரியவருகியது என்பதாகும்.
கீழை கங்கர்களின் குலதெய்வம் என்பது மகேந்திரகிரியில் உள்ள ''கோகர்ணேஸ்வர்'' ஆவார். இந்த தெய்வமானது இலங்கை திருகோணமலையில் ''கோணேசர்'' என்று வழங்கப்பெற்றது என்று தெரியவருகிறது. இலங்கை திருகோணமலையின் பூர்வீக நாமம் என்பது ''கோகர்ணம்'' என்பதாகும்.
''குளக்கோட்டனான சோழ கங்கன்'' அவர்களை சான்றுகள் ''பரிதி குல ராமன்'' என்றும் ''சோழ வம்சத்தவன்'' என்றும் குறிப்பிடுகிறது. இவர் அநேகமாக முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகன் வீரசோழனின் மரபினர் ஆவார். வீரசோழன் அவர்கள் வேங்கியின் அரசராவர். வீரசோழனின் அரசியார் வில்லவன் மாதேவியார் அவர்கள், வன்னிய குல நீலகங்கரின் மகள் ஆவாள். இந்த நீலகங்கரையர்கள் ''சோழ கங்க தேவன்'' என்ற பெயரினை கொண்டார்கள் என்பதாகும்.
இந்த குளக்கோட்டனான சோழ கங்கன் அவர்கள், திருகோணமலையில் வன்னியர்களையும், ஏழூர் அடப்பர்களையும் மற்றும் சிலரையும் குடியேற்றினான் என்பதாகும். இவன் இலங்கைக்கு வந்த காலம் கி.பி.1223 என்று குளக்கோட்டனைப் பற்றி ஆய்வு செய்த இலங்கை வரலாற்று அறிஞர் செல்வி தங்கேஸ்வரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதாகும்.
Article By - Shri Murali Nayakar
Comments
Post a Comment