நுளம்ப பல்லவர்களின் உறவினர்களான வன்னிய வேசாலிப் பேரரையர்கள்



நுளம்ப பல்லவர் என்பவர்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பேசும் பகுதிகளை அரசாட்சி செய்தவர்கள் ஆவர். இவர்கள் அரசாட்சி செய்த பகுதிகள் நுளம்பபாடி 32000 எனப்பட்டது. ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டமும், கர்நாடகாவின் சித்ரதுர்கா, தும்கூர், பெல்லாரி, பெங்களூர், கோலார் மாவட்டங்களும், தமிழ்நாட்டின் பழைய தருமபுரி மற்றும் வடஆர்க்காடு மாவட்டங்களும் நுளம்பபாடியுள் அடங்கியிருந்தன என்று தெரியவருகிறது. நுளம்பர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறுநில மன்னர்களாக இருந்து சுமார் 400 ஆண்டு காலத்திற்கும் மேல் அரசாட்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. 

வர்ணாசிரம தர்மங்களை நன்றாக கடைப்பிடித்த க்ஷத்ரிய பல்லவர்களின் கிளை மரபினர்களான நுளம்பர் என்பவர்கள், தங்களை ஹேமாவதி தூண் கல்வெட்டில் "ஈஸ்வர வம்சத்து திரிநயன பல்லவன் வழிவந்தவர்கள்" என்று குறிப்பிட்டனர். காஞ்சி பல்லவர்களும் இத் திரிநயன பல்லவன் வழி வந்தோரே என அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. பல தெலுங்குக் கல்வெட்டுகளில் திரிநயனன் என்னும் பொருள் படக்கூடிய "முக்கந்தி" என்ற புராணகாலப் பல்லவ முன்னோன் குறிக்கப்படுகிறான்.

மேலும் தெலுங்கு கல்வெட்டுகளில் "காடுவெட்டி" என்றும் "முக்கந்தி காடுவெட்டி" என்றும் பல்லவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள் என்று தெரியவருகிறது. நலஜனம்பாடு பண்டைய தெலுங்கு கல்வெட்டு ஒன்று பல்லவர்களை (கி.பி. 660 - 680) "பள்ளிகள்" என்று குறிப்பிடுகிறது :-

"Paramesvara Pallavaditya Sri-Badirajula andu palleyari koduku Badiraj" (Line 5 to 9 of the old-Telugu Inscription)

ஸ்ரீ போத்திராஜீலு வம்சத்து பள்ளியார் மகன் பரமேஸ்வர பல்லவராதித்ய போத்திராஜு (பல்லவராதித்ய = பல்லவர் குல தலைவன், பல்லவர் குலத்திற்கு சூரியன் போன்றவன்).

நுளம்ப பல்லவர்கள் அரசாட்சி செய்த தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பெரிய பொம்பட்டியில் இருக்கும், கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நடுகல் ஒன்று, வீர நுளம்ப அரசனை "பல்லவ குல திலகம்" என்று குறிப்பிடுகிறது (தருமபுரி கல்வெட்டுகள் : தொடர் எண் - 1972/14).

நுளம்ப அரசர்களை "பல்லவ குல திலகம்" என்று கல்வெட்டுகள் குறிப்பிடுவதை போன்றே, வன்னிய குல அரசனான "காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவனையும்", சோழர் கால கல்வெட்டுகள் "பல்லவ குல பாரிஜாதன்" என்றும் "காடவ குல திலகம்" என்றும் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் பல்லவ குல நுளம்பர்கள் என்பவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய வம்சத்தவர்கள்" என்பது உறுதியாகின்றது.

தருமபுரி மாவட்டத்தில், நுளம்ப பல்லவ மன்னர்களின் கல்வெட்டுகள் பல காணக் கிடைக்கின்றன. அரூர் வட்டத்தில் கெரஹோடஹள்ளியில் உள்ள வேடியப்பன் கோயிலில் கிடைக்கப்பெற்ற முதலாம் இராஜேந்திர சோழனின் நடுகல் ஒன்று (கி.பி. 1032) கிழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-

"நுளம்ப பாடியாகிய நிகரிலி சோழ மண்டலத்து 

புறமலை நாட்டுப் பாகலப்பள்ளி ஊர் அழிய எதிரே 

ஏறிஞ்சூ பட்டான் வேசாலிப் பேரரையர் மருகன் 

அண்ணயன் மகன் பப்பையன் இவன் மகன் பாலிதேவன் 

இக்கல் நிறுத்தினான்" (தருமபுரி கல்வெட்டுகள் : எண் - 1974/139).

முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் பாகலப்பள்ளி என்ற ஊர் எதிரிகளால் அழிக்கப்பட்ட பொழுது வேசாலிப் பேரரையர் அவர்களின் மருமகன் அண்ணயன் மகன் பப்பையன் என்பவன் எதிர் நின்று போரிட்டு பட்டான் (இறந்தான்). இறந்த பப்பையனுடைய நினைவாக அவன் மகன் பாலிதேவன் நடுகல் நாட்டினான். "அண்ணய்யன்", "பப்பையன்", "பாலிதேவன்" ஆகியோர் நுளம்ப சிற்றரசர்கள் ஆவர். சோழர்களின் குறுநில மன்னர்களாக விளங்கிய "பல்லவ குல நுளம்ப அரசர்கள்", நுளம்பபாடியாகிய நிகரிலிச் சோழ மண்டலத்தை அரசாட்சி செய்து வந்தனர்.

மேற்குறிப்பிட்ட நடுகல் (கி.பி. 1032) நுளம்ப அரசன் அண்ணய்யன் என்பவரை வேசாலிப் பேரரையரின் மருமகன் என்று குறிப்பிடுகிறது. எனவே நுளம்பர்களும், வேசாலிப் பேரரையர்களும் உறவினர்கள் என்பது தெளிவாகிறது.

வேசாலிப் பேரரையர்கள் யார் என்பதைப் பற்றி அறிய அவர்களுடைய கல்வெட்டுகள் நமக்கு துணைபுரிகின்றன. "வேசாலிப் பேரரையர்கள்" என்பவர்கள் கடலூர், சிதம்பரம் பகுதிகளைக் கொண்ட வேசாலிப்பாடி என்பதின் தலைவர்களாக இருக்கலாம் என்று முனைவர் சொ. சாந்தலிங்கம் ஐயா அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

வேசாலிப்பாடியின் குறுநில மன்னர்களான "வேசாலிப் பேரரையர்கள்" தங்களை சோழர்கள் காலக் கல்வெட்டில் "குடிப்பள்ளி" (வன்னியர்) என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டனர். 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி. 1070 - 1120) கல்வெட்டு ஒன்று கிழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-

"வெசாலிப் பிரமதெயத்திலிருக்கும் குடிப் பள்ளிப் பெருமான் இரண்டாயிரவநான ஸேநாபதி ராஜெந்தர சொழ வெசாலிப் பெரையந்" (S.I.I. Vol-VII, No.748).

வேசாலிப் பிரம்மதேயத்தில் இருக்கும் "குடிப் பள்ளிப் பெருமான் இரண்டாயிரவன்" (என்கிற) "சேனாதிபதி இராஜேந்திர சோழ வேசாலிப் பேரரையன்" என்பவர் இரண்டாயிரம் போர் வீரர்களுக்கு சேனாதிபதியாக சோழர்கள் காலத்தில் இருந்திருக்கிறார் என்பது கல்வெட்டின் மூலமாக தெளிவாக தெரியவருகிறது.  

மேலும் இவர்களது பெயரினில் (வேசாலி), பிராமணர்களுக்கு "வேசாலி பிரம்மதேயம்" ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் தெரியவருகிறது. சோழர்கள் காலத்தில் க்ஷத்ரியர்களே, பிராமணர்களுக்கு "பிரம்மதேயத்தை" ஏற்படுத்தி கொடுக்கமுடியும் என்பதாகும்.   

"வேசாலிப் பேரரையன்" என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுவதால், வேசாலிப்பாடியின் குறுநில மன்னர் ஆவார் என்பது தெளிவாகிறது. "பாடலிப்புத்திரம்", "வேசாலி" போன்ற புகழ்ப் பெற்ற நகரங்கள் வட இந்தியா பீகாரில் உள்ளன. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் என்பது பல்லவ வேந்தன் முதலாம் மகேந்திர வர்மனின் காலத்தில் "பாடலிப்புத்திரம்" என்று வழங்கப்பட்டது என்பதாகும். அங்கிருந்த சமணர்களின் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துத்தள்ளி, அதன் கற்களைக்கொண்டு எம்பெருமான் சிவனுக்கு கடலூர் திருவதிகையில் கோயில் அமைத்தார் காடவன் என்பதை புலவர் சேக்கிழார் அவர்கள் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதாகும்.     

இத்தகைய புகழோடு விளங்கிய நுளம்ப பல்லவர்களின் உறவினர்களான வேசாலிப் பேரரையர்களைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

Article by - Shri Murali Nayakar

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???