வன்னியர்கள் வெட்சி கரந்தை போர் புரிந்ததை பற்றி குறிப்பிடும் மற்றொரு கல்வெட்டு!!!
வெட்சி கரந்தை என்பதே முதல் போர் முறையாகும் என்பதை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிறது.
"வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்."
-(தொல்:3:2:02)
என்று தொல்காப்பியம் கூறுதலால் வேந்தனால் ஏவப்பட்ட படைவீரர் பகைவரான அயல் நாட்டு பகுதியினின்று நிரைகளை கவர்ந்து வந்து தம் நாட்டில் நிறுத்தி காத்தல் வெட்சி திணை என்பது விளங்கும்.
"ஆபெயர்த்துத் தருதலும்
.............
மனைக்குரி மரபினது கரந்தை"
-(தொல்:3:2:11,14)
எனப்படுதலால் பகைநாட்டு வெட்சிப்படையால் கவரப்பட்ட ஆநிரைக் கூட்டத்தை இந்நாட்டு படைஞர் மீட்பதே கரந்தை என்பதாகும்.
வெட்சி படைஞர் வெட்சிப்பூ மாலையையும், கரந்தை படைஞர் கரந்தைப் பூ மாலையையும் சூடுவர்.
இதற்கு முன் வன்னியர்கள் கரந்தை போரில் ஈடுபட்டதை பற்றி 2 கல்வெட்டுகள் உண்டு. ஆனால் வன்னியர்கள் வெட்சி போர் புரிந்ததை பற்றி குறிப்பிடும் முதல் கல்வெட்டு இதுவாகும்.
13ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல்வெட்டு விக்கிரம பாண்டியனின் 4ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டதாகும்.
"ஜெயவனத்தானிப்பாலை உடையான் அண்ணான்டை என்கிற வன்னிய நாடாழ்வான் மகன் திருமலை அழகியார் சமுத்திரம் என்ற இடத்திலிருந்து மாட்டை கவர்ந்து வருகையில் பிரண்டை என்ற இடத்தில் இறந்துள்ளார்"
இந்த வீரரின் உருவம் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
வீரன் கையில் வில், அம்பும், இடுப்பில் குத்துவாளும், தலையில் கொண்டையும் உள்ளவாறு உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வெட்சி - கரந்தை என்பது மன்னரால் ஏவப்பட்டு நாட்டின் நலனுக்காக வெட்சி, கரந்தையில் தேர்ந்தவர்கள் செய்வதாகும். இதற்கும் வயிற்று பிழைப்புக்கு களவு செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. மன்னரின் பெயர் நடுகல் கல்வெட்டில் இருக்கும் போது அதனை நாம் வெட்சி, கரந்தை செயலாகவே கொள்ள வேண்டும். இந்த நடுகல் வெட்சி, கரந்தையை குறிப்பிடும் நடுகல்லே ஆகும்
நடுகல் கிடைத்த இடம் - கலசபாக்கம், திருவண்ணாமலை.
Comments
Post a Comment