குரு வேந்தர் வம்சமான பூர்வதியாக்கள்
தகுடூர் பகுதிகளை ஆட்சி செய்த அரச மரபினரில் பூர்வாதியர்களும் ஒருவர்
இவர்கள் வன்னியர் குலத்தவர் என்பதை நடுகற்கள் எனும் நூலில் ஆதாரத்துடன் எழுதியுள்ளார்கள்
"பூர்வாதியா குமரனான சிக்கரசிறுப் பிள்ளைகளில் சொக்கந் கருவாயன் பள்ளி" என்பது கல்வெட்டு வாசகம்
இது பூர்வாதியர்கள் வன்னியர் என்று மெய்ப்பிக்கும் தெளிவான சான்று
இத்தகைய பூர்வாதியர்களை "குரு வேந்தர் வம்சம்" என்று 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த போசாளர் கல்வெட்டு குறிப்பிடுகிறது -
"குறுவேந்தவங்சத்து முரசுநாடாழ்வார் மகந் தர்மத்தாழ் வாராந பூர்வாதராயநேன்"
ஏற்கனவே பல சான்றுகள் வன்னியர்களை குரு வம்சத்தவர் என்று சான்றுள்ள நிலையில் இது மேலும் ஒரு முக்கிய நல்ல சான்றாகும்
பூர்வ அதியர்கள் என்போர் அதியர் மரபினராக இருக்க வாய்ப்புகள் உண்டு.
Comments
Post a Comment