வன்னிய குல மன்னர் நீலகங்கரையரின் மகளும் காடவ வேந்தன் கோப்பெருஞ்சிங்க பல்லவனின் அரசியுமான பாவம்தீர்த்த நாச்சியார்

                   




வன்னிய குல காடவ வேந்தர்கள், தங்களது திருமண உறவினை   சோழர்கள், சாளுக்கியர்கள், சம்புவராயர்கள், மலையமான்கள் ஆகியோர்களிடம் கொண்டிருந்தனர் என்பது கல்வெட்டின் வாயிலாக நமக்கு தெரியவருகின்றன.  இவர்கள் நீலகங்கரையை மன்னர்களிடமும் திருமண சம்மந்தம் செய்துள்ளனர் என்று தெரியவருகிறது.   

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள காடவ கோப்பெருஞ்சிங்கப்  பல்லவனின் கல்வெட்டு ஒன்று, அவரது அரசியார் பாவம்தீர்த்த நாச்சியாரைப் பற்றி குறிப்பிடுகிறது.  அரசியார் பாவம்தீர்த்த நாச்சியார் அவர்கள், மன்னர் பெருமான் நிலகங்கரையரின் மகள் என்று திருப்பாதிரிப்புலியூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.  


எனவே, மேற்குறிப்பிட்ட கல்வெட்டின் வாயிலாக தெரியவரும் கருத்து  என்னவென்றால், காடவர்களுக்கும் நீலகங்கரையர்களுக்கும் திருமண உறவு இருந்திருக்கிறது என்பதாகும்.  வன்னிய குலத்தவர்களான நீலகங்கரைய மன்னர்கள், சாளுக்கிய சோழ மரபினர்களுடன் திருமண சம்மந்தம் கொண்டிருந்தனர் என்பதை ராணிப்பேட்டை திருவல்லம் கல்வெட்டு தெரிவிக்கிறது.     


"அச்சல வீமன் அரைசர் தலைவன்" (மலையமான்  அரசர் தலைவன்) என்று முதலாம் குலோத்துங்கச் சோழனின் ராணிப்பேட்டை திருவல்லம் கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற நீலகங்கரின் மகள் "வில்லவன் மாதேவியார்" (சேர குல அரசி) அவர்கள், கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் அரசரான வீர சோழ தேவரின் அரசியாவார்கள்.  வீர சோழ தேவர் அவர்கள், முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகன்  ஆவார்கள்.   

எனவே, அடிப்படை சான்றுகளின் வாயிலாக தெரியவரும் கருத்து என்னவென்றால், காடவ வேந்தர்கள், தங்களது வம்சத்து மன்னர்களான சோழர்கள், சாளுக்கியர்கள், நீலகங்கரையர்கள், சம்புவராயர்கள் மற்றும் மலையமான்கள் ஆகியோர்களிடம் திருமண உறவினை கொண்டிருந்தனர் என்பதாகும்.

சோழர், சாளுக்கியர், காடவர், நீலகங்கர், சம்புவராயர், மலையமான் போன்ற அரச வம்சத்தவரிடையே நிலவிய திருமண உறவுமுறை என்பது எதை தெரிவிக்கிறது என்றால், இவர்கள் எல்லாம் ஒரே குருதித்தொடர்புடைய அரச வம்சத்தவர்கள் என்பதாகும்.  

தென்னிந்தியாவில் உள்ள வேறு எந்த ஒரு சமுதாயத்திற்கும் இதுபோல ஒரு பின்னிப்பிணைந்த அரச சமூக உறவுமுறை இருந்ததில்லை என்பதாகும்

Article By - Shri Murali Nayakar.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???