புதுக்கோட்டை நெடுவாசல் சீமைக்கு தலைவர்களான வன்னியர் குலத்து மாவலி வாணராயன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோவிலூர் வாணபுரிஸ்வரர் கோயில் கல்வெட்டு மாவலிவாணராயர்களை "வன்னியர்கள்" என்று தெரிவிக்கிறது. அது :-
"நெடுவாசலில் வன்னியரில் மாவலிவாணராயர்
மக்களில் பெற்றா . . . கள் காலிங்கராயரும்" (I.P.S. No.971)
மேலும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கல்வெட்டு மேற்குறிப்பிட்ட கல்வெட்டுச் சான்றுக்கு பக்கபலமாய் அமைகிறது. அது :-
"நெடுவாசல் சீமைக்குக் கறுத்தாவான பாண்டிபெருமாளான மாவுலிவாணாதராயர் மக்களில் திருமெனியழகியரான குலசெகரக் காலிங்கராயரும் பமயவனப்பெருமாளான சிவலக் காலிங்கிராயரும் செந்தாமரைக்கண்ணரும் இம்மூவருமொம்" (I.P.S. No,942)
எனவே, நெடுவாசல் சீமைக்கு தலைவர்களான (கர்த்தாவான) மாவலிவாணாதிராயர்கள் "வன்னியர்கள்" என்று உறுதியாகிறது. இந்த வன்னியர்கள் தான் பாண்டிய நாட்டில் அரசாட்சி புரிந்த மாவலிவாணாதிராயர்கள் என்று தெரியவருகிறது.
குறிப்பு : இந்த கட்டுரை "வாணாதிராயர்கள்" என்ற தலைப்பில், வன்னிய சிற்றரசர்கள் என்ற புத்தகத்தில் 2010 ஆம் ஆண்டு எழுதப்பட்டிருக்கிறது.
Article By - Shri Murali Nayakar




Comments
Post a Comment